பொறியியல் படிப்புக்கு ‘கட் ஆப்’ மதிப்பெண் குறைய வாய்ப்பு

1 Min Read

சென்னை, மே 9- தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் 8.5.2026 அன்று வெளியிடப் பட்டுள்ளன. இதில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்து உயர்கல்வி படிப்புக்கு செல்ல வேண்டும். உயர்கல்வியில், பொறியியல், வேளாண்மை, கால் நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு ‘கட் ஆப்’ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டுடன் (2024-2025) ஒப்பிடும்போது, இந்த ஆண்டு (2025-2026) மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் குறைந்துள்ளது. இதனால், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான ‘கட் ஆப்’ மதிப்பெண்கள் இந்த ஆண்டு குறைய வாய்ப்பு இருக்கிறது.

உதாரணத்திற்கு, இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 105 பேர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1,125 ஆக இருந்தது. அதேபோல், வேதியியல் பாடத்தில் 632 பேரும், உயிரியல் பாடத்தில் 784 பேரும், கணிதத்தில் 732 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு வேதியியலில் 3,181 பேரும், உயிரியலில் 827 பேரும், கணிதத்தில் 3,022 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கையே இவ்வாறு குறையும்போது, அதற்கு கீழ் மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கண்டிப்பாக குறையவே வாய்ப்பு இருக்கிறது. இதனால், இந்த ஆண்டு (2026-2027) பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு ‘கட் ஆப்’ மதிப் பெண்கள் குறையவே வாய்ப்பு இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *