வாக்குரிமையைப் பறிக்கும் அநீதிக்கு எதிராக முதலமைச்சர் உரக்கக் குரல் எழுப்ப வேண்டும் மு.வீரபாண்டியன் பேச்சு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கோவில்பட்டி, அக். 6- வாக்குரி மையைப் பறிக்கும் அநீதிக்கு எதிராக முதலமைச்சர் விஜய் உரக்கக் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தல் முறைகளில் மாற்றங்கள் தேவைப் படுகிறது. கம்யூனிஸ்ட்கள் இல்லாத சட்டப்பேரவை அவ்வளவு பொருள்படாது என முன்னாள் முதல மைச்சர் கலைஞர் கூறினார்.

அதற்கு விகிதாச்சாரப் படி தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் எனவும் முன்மொழிந்தார். இது இந்தியா போன்ற பல கட்சிகள் இயங்கும் நாட்டுக்கு நல்லது.

வெற்றி பெற்ற சட்டப் பேரவை உறுப்பினர்களை விலை பேசும் கலாச் சாரத்தை பாஜக தொடங்கி வைத்தது. அது தமிழ்நாடு வரை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 13 கோடி பேரின் வாக்குரிமையை பறிப்பது என்பது சாதாரணமல்ல.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள படுகொலை. அதை நிகழ்த்தியது பிரதமர், உள்துறை அமைச்சர், தலைமைத் தேர்தல் அதிகாரி.

ஜனநாயகத்தை காக்கும் அனைவரும் இந்த அநீதிக்கு எதிராக போராட முன்வர வேண்டும். வாக்குரிமையை பறிக்கும் அநீதிக்கு எதிராக முதல்வர் விஜய் உரக்க குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *