பெங்களூருவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா உயர் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெங்களூரு, அக்.5- பெங் களூரு தமிழ்ச் சங்கம், , பெரியார் மய்யம், தமிழர் தலைவர் ஆசிரியர் அரங்கத்தில் 20.9.2026 அன்று காலை 10 மணிக்கு கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் சே.குணவேந்தன் தலைமையுரையுடன் தொடங் கியது. மாநிலச் செயலாளர் அனைவரையும் வரவேற்று இணைப்புரை நிகழ்த்தினார்.

கழகக் காப்பாளர் மு.சானகி ராமன், மாநிலத் துணைத் தலைவர் ஜெ.அருண், மூத்த உறுப்பினர் பு.ர.கஜபதி, செயலட்சுமி முன்னிலை வகித்தனர். கழகக் கொடியை பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் முத்து மணிநன்னன் ஏற்றி வைத்தார். தந்தை பெரியார் ஒளிப்படத்தினை பெரியார் பெருந்தொண்டர் சி.இராசன் அவர்களும், அறிஞர் அண்ணாவின் ஒளிப்படத் தினை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் கி.தட்சணாமூர்த்தி அவர்களும் திறந்து வைத்தனர்.  மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியார் பற்றாளர் நன்னன் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வாக பல சுவை கேக்கினை வெட்டி, அனை வருக்கும் வழங்கி பெரியார் குறித்த பாடல் ஒன்றினைப் பாடினார். கழகத் தலைவர் சே.குணவேந்தன் வண்ணப் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார். அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்வினை வெளிப்படுத்தினர்.

குடிநீர் வடிகால் மேனாள் செயற்பொறியாளர் ஆ.கமலக்கண்ணன் தொகுத்த உயர் சிந்தனைகள் என்னும் நூலினை தஞ்சை இரா.பெரியார் செல்வன் வெளியிட தலைவர் சே.குணவேந்தன், காப்பாளர் மு.சானகிராமன், நன்னன், முத்துமணி, மற்றும் மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் பெற்றுக் கொண்டனர். கழகத் தலைவர் சே.குணவேந்தன் வண்ணப் பயனாடை அணி வித்தார்.

தந்தை பெரியார் குறித்து கன்னட அமைப்பின் செயலா ளர் நாகேஷ் கன்னட மொழியில் உரை நிகழ்த்தினார். கழக மென் பொருள் அணித் தலைவர் கரு.பாஸ்கரன் ஆங்கில மொழியில் உரை நிகழ்த்தி சிறப்பித்தார். இளங்கோவனின் இணையர் அன்னம்மாள், மேனாள் தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், சமூக ஆர்வலர், வழக்குரைஞர் தி.நரசிம்மமூர்த்தி, தமிழ்ச் சங்க துணைத் தலைவர் அமுத பாண்டியன் சிறப்பான உரை நிகழ்த்தினர்.

நிகழ்வு தொடங்கும் முன்னர் பொறியாளர் ஆ.கமலக்கண்ண னின் இணையர் உஷாதேவி மறைவிற்கு அமைதி காத்து மரியாதை தெரிவிக்கப்பட்டது.

கழக உரை வீச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் சிறப்புரை நிகழ்த்தினார். கழகத் தலைவர் கே.குணவேந்தன், தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் கி.தட்சணாமூத்தி உயரிய பயனாடை அணிவித்து சிறப்பித்தனர். ஒரு மணி நேரம் தந்தை பெரியார், அணிஞர் அண்ணா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் குறித்து நெடிய உரை நிகழ்த்தி சிறப்புரை நிகழ்த்தினார். கழக மென்பொருள் அணிச் செயலாளர் சு.ஒளிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம், சித்தார்த்தன், சரவணன், வி.கிருபாநிதி, அனந்தபுரம் தலைவர் ந.குணசேகரன், அன்பு நெஞ்சம் த.ஜேம்ஸ், மனோகரர் சத்திய வாணி, அறிவழகன், பெரியார் பிஞ்சு மலர்விழி மற்றும பலர் கலந்து கொண்டனர்.

கழகத்தின் புதிதாக இணைந்த அழகேசன் வெண்ணிலா, மனோகரன் ஆகியாரை அறிமுகம் செய்து பயனாடை அணிவிக்கப்பட்டது. மாநிலத் துணைத் தலைவர் ஜே.அருண் நன்றி கூறினார். அனைவருக்கும் மதியம் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *