ராசகிரி, அக். 5- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன மேனாள் துணைத் தலைவர் ராசகிரி கோ.தங்கராசு அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளில் அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்டக் தலைவர் கு.நிம்மதி, பொதுக் குழு உறுப்பினர் விஜயகுமார், திருவிடை மருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன், திருநாகேஸ்வரம் நகரச் செயலாளர் திராவிட பாலு, திருநாகேஸ்வரம் கழக விஜயகுமார், ராசகிரி ஜனார்த்தனன், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் சு.கலியமூர்த்தி கும்ப கோணம் மாவட்ட கழகக் காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன், பாபநாசம் ஒன்றிய ப.க. தலைவர் மு.சேகர், மாவட்ட ப.க.அமைப் பாளர் திருஞானசம்பந்தம், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லெனின் பாஸ்கர், மாவட்ட செயலாளர் சு. துரைராசு திருவையாத்துக்குடி ஜெயபால், பாபநாசம் நகர செயலாளர் மு.வீரமணி பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் தங்க.பூவானந்தம் அவரது இணையர் மதுரவல்லி, ராஜகிரி புஷ்பா பாப நாசம் நகர தலைவர் வெ.இளங் கோவன் ஆகியோர் சிறப்பு செய்தனர்.
