நேதாஜி சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினாரா? பிரதமர் பேச்சும் – பேரனின் மறுப்பும்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக். 4 சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறிய பேச்சுக்கு, நேதாஜி கொள்ளுப்பேரன் சந்திரகுமார் போஸ் மறுப்புத் தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

யுபிஎஸ்சி-யின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் மோடி பேசிய இந்த பேச்சு வைரலான சில மணிநேரங்களிலேயே, நேதாஜியின் கொள்ளுப் பேரன் சந்திர குமார் போஸ், அந்த தகவல் தவறானது என்று பொதுவெளியில் பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் பேச்சு குறித்த செய்தியை மேற்கோள் காட்டி, சந்திர குமார் போஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், உருது, ஹிந்துஸ்தானி என பல மொழிகள் அறிந்தவர். அவர் பல மொழி வித்தகர்தான். ஆனால், இந்தியக் குடிமைப் பணித் தேர்வை (Indian Civil Service exam) அவர் ஆங்கிலத்தில்தான் எழுதினார்; ஏனெனில், அத்தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்பட்டது.

ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தகைய தவறான தகவலை வழங்கியது யார் என்று. வரலாற்றை இத்தகைய விதமாகத் திரித்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும், ஜெய் ஹிந்த் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் சமஸ்கிருத தேர்வு குறித்த பேச்சு குறித்து சமூக ஊடகத்தில் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், சந்திர குமார் போஸ் இந்த கருத்தை வெளியிட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

என்ன பேசியிருந்தார்
பிரதமர் மோடி?

கடந்த 1926-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி நிறுவப்பட்டு, நூறு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், ஓராண்டு கால கொண்டாட்டங்களின் நிறைவாக அக். 1ஆம் தேதி புதுடில்லியில் யுபிஎஸ்சி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நினைவு நாணயம், அஞ்சல் தலை வெளி யிட்ட பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றியபோது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த கடந்த 1920-ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார்.

ஒவ்வொரு இந்தியரும் யுபிஎஸ்சி நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கொண்டாடும் தருணம் இது.

இந்த வளாகத்தில் உள்ள ஒளிப்படக் காட்சியகத்தைப் பார்வையிட்டபோது, 1920-ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் இதே நடை முறைக்கு உட்பட்டது குறித்த விவரங்களை நான் கண்டேன். அக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்துகொண்டிருந்தபோதிலும், சமஸ்கிருதப் பாடத்திற்கான தேர்வு ஒன்று இருந்தது என்பதும், சுபாஷ் பாபு அத்தேர்வை சமஸ்கிருத மொழியிலேயே எழுதினார் என்பதும் என் கவனத்தை ஈர்த்தது என்று பிரதமர் கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், யுபிஎஸ்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *