24 மணி நேரப் பணியின் போது மருத்துவர்கள் தூங்குவது தவறில்லை! தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதுரை, அக். 3- 24 மணி நேர பணி செய்யும்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மருத்துவர்கள் தூங்குவது தவறில்லை என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் சிறீனிவாசன் தெரிவித்தார்.

“தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று (2.10.2026) நள்ளிரவில் சிறீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் தூங்கிக் கொண்டிருந்ததால் செவிலியர் மூலம் அலைபேசியில் அழைத்து வெளியே வரச் செய்தார். பணி நேரத்தில் அவர் தூங்கியதாக இதுபற்றி தகவல் பரவுகிறது. இது தவறு. மருத்துவர்களின் வேலை நேரம் தெரியாமல் தவறாகப் பேசக்கூடாது.

அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாரத்தில் ஒரு நாள் அல்லது அய்ந்து நாட்கள் அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை என மருத்துவர்களுக்கு 24 மணி நேர பணி வழங்கப்படும். காவல்துறையில் கூட இப்படி 24 மணி நேர பணி கிடையாது. மருத்துவர்களுக்கு மட்டும்தான் இந்த பணி உண்டு.

எனவே நேரம் கிடைக்கும் போது மருத்துவர்கள் ஓய்வு எடுப்பது இயல்பான விஷயம்தான். தொடர்ந்து மருத்துவப் பயனாளிகள்  (நோய் பாதிப்படைந்தவர்கள்) வந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ 24 மணி நேரமும் ஓய்வு எடுக்காமல் வேலை பார்ப்பது மருத்துவர்கள் மட்டும்தான். நள்ளிரவில் சட்டமன்ற உறுப்பினர், ஆய்வு செய்ய வந்தாரா? அல்லது மருத்துவப் பயனாளியை அழைத்து வந்தாரா என தெரியவில்லை. ஆனால் அவர் வரும்போது அங்கே மருத்துவப் பயனாளிகள் யாருமே இல்லை.

மருத்துவப் பயனாளி இல்லாத நேரத்தில் மருத்துவர் தூங்கி ஓய்வெடுப்பதில் தவறில்லை. அரசு மருத்துவமனை என்பது எல்லோரும் வந்து செல்லும் பொதுவான இடம். அங்கு அறைக்கதவை மருத்துவர் திறந்து வைத்து தூங்கினால் அவரது அலைபேசி, பர்ஸ் போன்றவை திருடப்படக்கூடும். எனவே கதவை பூட்டி தூங்கினார். செவிலியர் மருத்துவப் பயனாளி வந்து விட்டார் என நினைத்து உடனடியாக வெளியே வந்துவிட்டார். அவர் பணியில் இல்லாமல் இருந்தாலோ அல்லது வெளியே சென்று இருந்தாலோ தான் இது குறித்து கேள்வி எழுப்பவேண்டும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *