பெரியார் பாலிடெக்னிக்கில் ‘இனிவரும் உலகம்’ அறிவியல் கண்காட்சி!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 07.10.2026 அன்று ”இனிவரும் உலகம்” என்ற தலைப்பிலான பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது.

பள்ளி மாணவர்களின் சிந்தனைத் திறமையையும், அறிவியல் மனப்பான்மையையும் ஒருங்கிணைத்து அவர்களின் புதுமையான ஆராய்ச்சி திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக தொழில்நுட்ப ஆராய்ச்சித் திட்டம், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அணுகுமுறை, மாதிரித் திட்டங்களின் செயல்முறை விளக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாபெரும் அறிவியல் கண்காட்சி 2026 நடைபெற உள்ளது.   போட்டியில் பங்கு பெற விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள் இக்கல்லூரியை (9787871757) தொடர்புக் கொண்டு தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 

“பெரியார் கபாடி போட்டி 2026”

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான “கபாடிப் போட்டி 2026” நடைபெற உள்ளது.

பள்ளி குழந்தைகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும் மற்றும்  போதை இல்லாத சமு தாயத்தை உருவாக்கவும் பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி சார்பில் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கபாடிப் போட்டி 09.10.2026 அன்று நடைபெற உள்ளது.

மேலும் இந்தப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு கோப்பையுடன் ரூபாய் 7,500 பரிசு தொகையும், இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு கோப்பையுடன் ரூபாய் 5,000 பரிசு தொகையும் மற்றும் மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு கோப்பையுடன் 2,500 ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி சிறந்த மூன்று வீரர்களுக்கான சிறப்புப் பரிசும் உண்டு. இந்த போட்டியில் பங்கு பெறும் அணிகள் தங்கள் அணியின் பதிவு செய்ய 07.10.2026 கடைசி தேதி ஆகும். போட்டியில் பங்கு பெறும் விருப்பமுள்ள அணிகள் கல்லூரியை (8667261898) தொடர்பு கொண்டு தங்கள் அணியை பதிவு செய்து கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *