பெங்களூருவில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் இணையவழி சிறப்புக் கவியரங்கம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெங்களூரு, அக். 4- கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் சென்னை நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்புக் கவியரங்கம் சிறப்பான வகையில் முன்னெடுத்த காணொலி வழியில் 17.9.2026 அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவ டைந்தது.

கவியரங்கத்தினை கவிஞர் சுசித்ரா செல் லப்பன் அறிமுக முன் மொழிவுடன் தொடங்கி யது. நிகழ்வில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் புதுக்கோட்டை கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமையேற்று தந்தை பெரியார் சிறப்புகளை விளக்கி கவிதை வடிவில் சிறப்பித்தார். மதுரை நட்பு தமிழ் வட்டத் தலைவர் புலவர் நாநா ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கவிதை பாடி, நிகழ்வின் ஒருங்கிணைத்தும், கவிஞர்களின் கவிதைகளை மதிப்பீடு பணிகளை நெறிப்படுத்தினார்.

சமத்துவம் விதைத்த சூரியன்

ஜாதி ஒழிப்பு சுட ரொளி

கேள்விகளின் எரிமலை பெரியார்

பெரியார் – நேற்று இன்று நாளை

என்ற தலைப்பில் 47 கவிஞர் பெரு மக்கள் எழுச்சியூட்டும் வகையில் தந்தை பெரியார் குறித்த கவிதைகளைப் பாடிச் சிறப்பித்தனர். கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சே.குணவேந்தன், நிமிர் இலக்கிய வட்டம் நிறுவனர் கவிஞர் கா.பாபு சசிதரன் கவிதை பாடி சிறப்பித்தனர்.

47 கவிஞர்களும், தந்தை பெரியார் அவர்களைக் குறித்து அனல் கக்கும் எரிமலையாய் கவிதை பாடி நெருப்புச் சுடர் மொழிந்து சிறப்பித்தனர். 37 கவிஞர்களின் முழக்கங்கள் அனைத்தும் பெரியாரை சூரியன், சுடரொளி, எரிமலை என்று கவிதை பாடி முழக்கமிட்டனர். எதிர்பார்த்ததைவிட 10 கவிஞர்கள் சிறப்பான கவிதை பாடியதாக தேர்வு செய்யப்பட்டு ரொக்க தொகை நூல் மற்றும சான்றிதழ்களை அறிவித்து தனது தலைமை உரையை நிறைவு செய்தார் கவிச்சுடர் கவிதைப்பித்தன். தந்தை பெரியார் அவர்களை பாராட்டி கவிதைகளால் பாடியமை புத்துணர்வும், எழுச்சியும் ஏற்படுத்தும் சிறப்பான வகையில் அமைந்தது.

கவியரங்க நிகழ்வில் ஏராளமான தோழர்களும், கவிஞர் பெருமக்களும் காணொலி வழியே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *