‘ ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா பற்றி ஆராயும் நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி அக். 3-  நாடாளு​மன்​றத்​தில் அறி​முகப்​படுத்​தப்​பட்ட ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ தொடர்​பான சட்ட மசோ​தாக்​கள் குறித்து ஆய்வு செய்ய பா.ஜ.க. உறுப்​பினர் பி.பி.சவுத்ரி தலை​மை​யில் நாடாளு​மன்​றக் கூட்​டுக் குழு அமைக்​கப்​பட்​டது.

மக்​களவை, மாநில சட்​டப்​பேர​வை​களுக்கு ஒரே நேரத்​தில் தேர்​தல்​களை நடத்​து​வது தொடர்​பான மசோதா குறித்து ஆய்வு செய்​யும் இந்தக் குழு, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி மற்​றும் நீதிப​தி​களை அக்​டோபர் 6 ஆம் தேதி சந்​தித்து ஆலோ​சனை நடத்த திட்​ட​மிட்​டிருந்​தது. ஆனால், சட்​டம் இயற்​றும் நாடாளு​மன்​றத்​தின் குழு​வானது, சட்​டத்​தின் செல்​லுபடி​யாகும் தன்​மையை ஆய்வு செய்​யும் நீதித்​துறை அதி​காரி​களு​டன் கலந்​துரை​யாடு​வது அரசி​யலமைப்​புச் சட்டத்திற்கு எதி​ரானது என எதிர்க்​கட்​சிகள் விமர்​சனம் செய்​தன.

இந்​நிலை​யில், நாடாளு​மன்​றக் கூட்​டுக் குழு​வுட​னான கூட்​டத்தை உச்ச நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது. இதுகுறித்து குழு​வுக்கு அனுப்​பப்​பட்ட தகவலில், “இந்​தத் திருத்​தம் எதிர்​காலத்​தில் நீதி​மன்ற ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​படலாம் என்​ப​தால், நிர்​வாக ரீதி​யாக இதுகுறித்து விவா​திப்​பது பொருத்​த​மான​தாக இருக்​காது” என்று தெரி​வித்​துள்​ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *