டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஞானேஷ்குமார் எதிர்ப்புப் போராட்டம்: மும்பையில் திரண்ட மக்கள்; டில்லியில் கைது — தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரானப் போராட்டம் தீவிரம். இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய போராட்டங்களை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரில் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
* கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டம்: காந்தியின் வாசகங்கள், மூவர்ணக் கொடிகளுடன் மும்பை சிவாஜி பூங்காவில் தேர்தல் ஆணையருக்கு எதிரான சி.ஜே.பி. போராட்டம்; ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘அதிக சத்தமான டி.ஜே. (DJ) இசை’ காரணமாக உ.பி. சிறுமி உயிரிழப்பு: ஒலி மாசுபாடு குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை. ஒலி மாசுபாடு விதிகளை அமல்படுத்தும் பொறுப்பு யாருக்கு? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆவணங்கள் இல்லாமல் கால்நடைகளைக் கொண்டு சென்றதாலே அவை இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கருத முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு. இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டது அல்லது அவை கொல்லப்படலாம் என்பது குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தெரியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
தி இந்து:
* ஆறு சரணங்களைக் கொண்ட ‘வந்தே மாதரம்’ பாடலை ‘மதப் பிளவை ஏற்படுத்தும் போர் பாடல்’ எனக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல். ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளர்களை மய்யமாக கொண்ட பாடலை தேசியப் பாடலாக கட்டாயப்படுத்துவது மதச் சுதந்திரத்தையும், மதச்சார்பின்மையையும் பாதிக்கும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) குறித்து ஆய்வு செய்ய, முன்னாள் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை வழக்குரைஞர்கள் சங்கம் அமைத்துள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகூர் தலைமையிலான 5 பேர் குழு, எஸ்.அய்.ஆர்-இன் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வத்தன்மை, நடைமுறை மற்றும் ஒட்டுமொத்த தாக்கத்தை ஆய்வு செய்யும்.
* தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்டோபர் 10இல் ‘சலோ டில்லி’ போராட்டம் நடத்தப்படும் என சி.ஜே.பி. அறிவிப்பு. போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என்றும், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வந்த நிலையில், தற்போது ஆளும் தவெக அரசு அதே நடவடிக்கையை மேற்கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் பெயர்கள் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, இது தமிழ்நாட்டின் நீண்ட கால இருமொழிக் கொள்கைக்கு எதிரானது என்றும், இதுதான் தவெக வாக்குறுதியளித்த “மாற்றமா?” என்றும் கேள்வி.
– குடந்தை கருணா
