த.வெ.க.வின் நாடகங்களை பார்த்துவிட்டோம் ஆதரவு குறித்து யோசிப்போம்! மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் பேட்டி

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருவாரூர், அக்.2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று (1.10.2026) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

முதல்வர் விஜய், பாஜ கொள்கை எதிரி என்று சொன்னால் மட்டும் போதாது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கண்ணுக்கு முன் இவ்வளவு பெரிய மோசடி நடக்கும் போது அதனை முதலமைச்சர் விஜய் வேடிக்கை பார்த்து வருகிறார்.

இது போன்ற மோசடிகளை செய்து வரும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எனவே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், எஸ்.அய்.ஆர் பணிகள் அனைத்தும் ரத்து செய்யப் பட வேண்டும். நீக்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற உள்ளன. நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை யின்மை காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை பிரதமர் மோடி கொஞ்சம், கொஞ்சமாக ஒழித்து வருகிறார். தவெக அரசுக்கு ஆதரவு என்பது அன்றைக்கு இருந்த தேவையை கருதிக் கொடுத்ததாகும். அதனால் நாங்கள் என்றைக்கும் ஆதரவில் இருக்கிறோம் என்ற அர்த்தம் இல்லை.

இந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் இருக்குமா, இல்லையா என்பது வேறு விஷயம். இருப்பினும் சட்டமன்றத்தில் மீண்டும் பெரும் பான்மை நிரூபிக்கும் நிலை அரசுக்கு ஏற்பட்டால் அப்போது யோசித்து முடிவு எடுப்போம். தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர் அழுத சம்பவம் தேர்தல் நேரத்தில் இது போன்ற நாடகங்களை எல்லாம் ஏற்ெகனவே நாம் பார்த்துள்ளோம்.

‘‘தவெகவுடன் பாமக கூட்டணி வைத்தால் விசிக என்ன செய்யப் போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாமக இருக்கிற இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என ஏற்ெகனவே தொல். திருமாவளவன் தெளிவாக சொல்லியுள்ளார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *