தொலைதூரக் கல்விக்கான மாணவர் சேர்க்கை அக்.13 வரை நீட்டிப்பு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 02-  தொலை தூரக் கல்வி 2026 ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி அக்டோபர் 13 வரை நீட்டிக் கப்பட்டிருப்பதாக இக்னோ அறிவித் துள்ளது.

இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் ஜெ.எஸ்.டாரதி நேற்று (2.10.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக் கல்வி திட்டத்தின் கீழ் பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.

தற்போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2026 ஜூலை பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி அக்டோபர் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி அக்டோபர் 13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இக்னோ-வில் பி.ஏ, பி.காம், பி.எஸ்சி படிப்புகளில் சேரும் தகுதியுள்ள எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்கலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும் இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-2661 8040 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *