ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் அரசுக்கு உயர் நீதிமன்றம் சவுக்கடி! தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக்.02-  “அரசு வழக்குரைஞர்கள் நியமன ஊழல் தொடர்பான வழக்கில் தவெக அரசை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நன்றாய் வெளுத்துள்ளது. ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்காருக்கு உயர் நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊழலை ஒழிக்கும் உத்தம ஆட்சி போல வேடம் போட்ட தவெக அரசின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது நீதிமன்றம்.

ஆட்சிக்கு வந்தவுடனே அரசு வழக்குரைஞர் நியமனத்தில் பார்ட்டி ஃபண்ட் வசூல் செய்ய தொடங்கிவிட்டது தவெக அரசு என பல புகார்கள் எழுந்தன. அரசு வழக்குரைஞர் நியமனத்தில் 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை வசூலித்த தாக தவெகவை சேர்ந்த வழக்குரை ஞர் ஞானசுந்தரி என்பவரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த ஊழல் தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என திமுக துணை அமைப்புச் செயலாளர் ப. தாயகம் கவி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC)-இல் புகார் அளித்தார். ஆனால், ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள் செய்தது என்ன? புகார் அளித்த அந்த வழக்குரைஞரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு வழக்கை மூடி மறைக்க பார்த்தனர்.

அண்மையில் கன்னியா குமரி மாவட்டத்தில் அரசு வழக்குரைஞர்கள் நியமனங் களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஒலிப்பதிவு வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தவெக அரசை நன்றாய் வெளுத்துள்ளது.

“லஞ்சம் கொடுத்து வழக் குரைஞர்களாக வர வேண்டுமா?” என்றும், “இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா அல்லது சட்டத்தைப் பாது காப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி உடனடியாக இப்புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

அதோடு “அரசு வழக் குரைஞர் நியமன ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முன்கூட்டியே புகார் அனுப்பப்பட்டும், அவர்கள் ஏன் இன்னும் விசாரணையைத் தொடங்கவில்லை? புகார் வந்தால் விசாரிக்க மாட் டீர்களா? லஞ்சம் தொடர்பான ஒளிப்பதிவு ஆதாரங்கள் இருந்தும் ஏன் இன்னும் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை?” என்றெல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறையின் மந்தமான செயல்பாட்டை நீதிமன்றம் நேரடியாகச் சாடியிருக்கிறது. ஊழலை மூடி மறைக்க முயன்ற விஜய் சர்க்காருக்கு உயர் நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது.

இந்த அரசு வழக்குரைஞர் நியமன ஊழல் மூலம் பல கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இந்த பல கோடி ரூபாய், தவெக பார்ட்டி ஃபண்டுக்கு வசூலிக்கபட்டதா? அதுபற்றி விசாரிக்குமா தமிழ் நாடு லஞ்ச ஒழிப்புத் துறை. இதற்கு பொறுப்பான சட்டத் துறை அமைச்சர் வீட்டில் சோதனை செய்யுமா லஞ்ச ஒழிப்பு துறை?

தூயசக்தி என கொடுத்து வந்த பில்டப்பை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறையை தவெகவின் கிளை அமைப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தூய சக்தியின் லட்சணத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது. இவர்கள் தூய சக்தியல்ல, தவெக ஒரு திருட்டு சக்தி என்பது வெளிப் பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *