காஞ்சிபுரத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா! அறிவு வளர்ச்சி மன்றத்தின் நன்றிப் பெருவிழா!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திராவிடர் கழகம்

காஞ்சிபுரம், அக். 1– 20.9.2026 அன்று மாலை 5.00 மணியளவில், காஞ்சிபுரம், காந்தி சாலை, ராஜ்பவன் அரங்கில், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, அறிவு வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் நாத்திகம் நாகராசன் தலைமையில் நடைபெற்றது.

குழந்தைகளை வைத்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியை நடத்தும் காரணத்தை விளக்கியும் பெரியார், அண்ணா குறித்து நன்றிப் பெருக்குடன் உரையாற்றினார்.   பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 21 மாணவச் செல்வங்கள் தந்தை பெரியார் குறித்தும் அறிஞர் அண்ணா குறித்தும் உரையாற்றினர். எழுச்சிப்பாடகர் உலக ஒளி, விஷார் ஜெகன்நாதன் ஆகியோர் தந்தை பெரியார் குறித்தும் பேரறிஞர் அண்ணா குறித்தும் பாடல் களை உணர்ச்சிபூர்வமாகப் பாடினர்.  மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியில் தோழர் காஞ்சி அமுதன், தோழர் ரவி பாரதி, தோழர் திருமலை, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா. இளம்பரிதி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா. கதிரவன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக, திராவிடர் கழகத்தின் கிராமப்புறப் பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை குறித்தும் அறிஞர் அண்ணா அவர்களின் சாதனைகள் குறித்தும் மக்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ள நிலைகுறித்தும் அவற்றிலிருந்து விடு படவேண்டிய அவசியம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவரின் செயல் பாடுகள் குறித்தும் உரையாற்றினார். அகவை முதிர்ந்த தமிழர் அறிஞர்கள் கவிஞர் கூரம் துரை, நடிகர் ஆ.திருமலை, எழுச்சிப் பாடகர் உலக ஒளி, விசார் மு. ஜெகநாதன், வதியூர் மா.மணி, உழக்கோல்பட்டு து.விநாயகம், சித்தேரிமேடு சா.ஏகாம்பரம், வளத்தூர் பிச்சைமுத்து, சித்தேரிமேடு கஜபதி, சித்தேரிமேடு முருகேசன், காஞ்சி கு.வசந்தா, காஞ்சி வி.எல்லப்பன், காஞ்சி பொன். குமாரசாமி, கூரம் பா. பாலகிருஷ்ணன், குப்புசாமி ஆகி யோர் பொன்னாடை அணி வித்து பாராட்டப்பட்டனர். மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டப் பட்டனர். பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட செயலாளர் வெ.சிறீதர் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில், வாலாஜாபாத் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ். செல்வம், போளூர் பன்னீர் செல்வம், உதயகுமார், தமிழீழம், கவித்தம்பி, மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் வீ.கோவிந்தராஜ், செயலாளர். இ.ரவிந்திரன், மாவட்ட மாணவர் கழகத் தோழர் அருண்குமார், தோழர் பாரதி விஜயன், தோழர் பவணந்தி, தோழர் மகேந்திரன், தோழர் பழனி, பகுத்தறிவாளர் கழகத் தோழர் பாலிமேடு சேகர் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பெரியார், அண்ணா பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *