தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 20 சதவீதம் குறைவு!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை அக். 01- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இயல்பை விட 20 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கணக்கில் கொள் ளப்படுகிறது. இந்த பருவ மழை முற்றிலும் நீங்க, அக்டோபர் மாதம் 2-ஆவது வாரம் வரை காலம் எடுத்துக் கொண் டாலும், செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப் படுகிறது.

அந்த வகையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பெறக்கூடிய மொத்த மழை என்பது 32.8 செ.மீ. ஆகும். இது இயல்பான மழை அளவு. நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் (29-ஆம் தேதி வரை) வரையிலான நிலவரப்படி, 25.8 செ.மீ. மழை கிடைத்திருக்கிறது. இது இயல்பைவிட 20 சதவீதம் குறைவு ஆகும்.

இது கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து நடப்பாண்டு வரையிலான தென்மேற்கு பருவமழை கால மழை அளவு புள்ளி விவரங்களின்படி, மிகவும் குறைவான மழையை பெற்றிருக்கிறது. எல்நினோ தாக்கம் காரணமாக நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை குறைவாகவே பதிவாகியுள்ளது. தமிழ் நாடு, புதுச்சேரியை பொறுத்தவரையில், தென் மேற்கு பருவமழையை காட்டிலும், வடகிழக்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது.

இருப்பினும் வடகிழக்கு பருவமழை கைக்கொடுக்காத பட்சத் தில், இந்த தென்மேற்கு பருவமழைதான் விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை கொடுக்கும் மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடப் பாண்டில் இந்த தென் மேற்கு பருவமழை ஏமாற் றியுள்ளது. இப்போது வரை கோடை காலத்தில் கொளுத்தும் வெயில் போல, தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பம் சுட்டெரிக்கிறது.

தமிழ்நாட்டில் கோவை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறை வாக பெய்துள்ளது. திரு நெல்வேலியில் மட்டும் இயல்பான அளவான 8.9 செ.மீ.யைவிட அதிகமாக 41.6 செ.மீ. மழையை கொட்டியுள்ளது. மேற் சொன்ன மாவட் டங்களை தவிர, மற்ற மாவட் டங்களில் இயல்பை விட 5 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை மழை குறைந் திருக்கிறது.

தென்மேற்கு பருவ மழை கைவிரித்த நிலையில், அடுத்ததாக தொடங்க இருக்கும் வடகிழக்கு பருவமழையைத்தான் தமிழ்நாடு, புதுச்சேரி மலைபோல் நம்பி இருக்கிறது. இந்த ஆண்டு இயல்பைவிட மழை அதிகமாக இருக்கும் என முன்கூட்டிய வானிலை கணிப்பில் கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *