மூன்று நாள் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் முடிவு ஒத்திவைப்பு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 28- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 நாள் வேலை, ஓய்வூதியப் பயன்கள், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும்.

அனைத்து ஊழியர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் பிஎல்அய் (லாபத்தின் அடிப்படையில் இணைப்பு ஊக்கத்தொகை) சமமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று முதல் 30ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வங்கிக் கிளைகளில் பணி யாற்றும் 8 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 3 நாள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக வந்தது. தொடர் விடுமுறையால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.

வங்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை யான நேற்று வங்கிகள் இயங்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது.

அதன்படி, நேற்று (27.9.2026) அனைத்து பொதுத்துறை வங்கிகளும் வழக்கம் போல் இயங்கின. வாடிக்கையாளர்கள் தங்களோட கிளைகளுக்குச் சென்று வழக்கமான வங்கி சேவைகளை தொடர்ந்தனர்.

அதாவது, பணம் எடுத்தல், பணம் டெபாசிட், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட பரிவர்த்தனைகளை செய்தனர். ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் மற்ற நாட்களை போலவே வங்கிகள் இயங்கியதை பார்க்க முடிந்தது.

3 நாள் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக ஓய்வூதியத் தொகையை எடுப்பது உள்ளிட்ட தேவை களுக்காகவும், அவசர பணப் பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ளவும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளுக்கு வந்தனர்.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று பணிக்கு வந்த ஊழியர்கள் கருப்பு உடை, கருப்பு பேட்ஜ், கருப்பு ரிப்பன் அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 3 நாட்களுக்கு பிறகு காந்தியார் பிறந்த நாள் விடுமுறையும் வருகிறது.

இதனால், பல கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து, வரும் திங்கள் முதல் புதன்கிழமை வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏடிஎம் சேவை வழங்கப்படும் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்தன.

வாடிக்கை யாளர்கள் கணக்கு வைத்து இருக்கும் ஏடிஎம்மில் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்திற்கு 3 முறையும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந்தியா முழுவதும் பெரும் சிக்கலை இந்த வேலை நிறுத்தம் ஏற்படுத்தும் என்பதால் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வர அய்பிஏ (இந்திய வங்கிகள் சங்கம்) தீவிர முயற்சியில் இறங்கியது. இந்தநிலையில், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை விடுப்பு அளிப்பது குறித்து ஆலோசிக்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளின் அடிப் படையில் வேலைநிறுத்த போராட் டத்தை ஒத்திவைப்பதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது. இதனால், வங்கிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *