சுருக்கு மடி வலையை மீனவர்கள் எடுத்துச் செல்லத் தடையா? தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.1- ‘சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ள நிலையில், அதனை மீனவர்கள் எடுத் துச்செல்ல அனுமதிக் காதது ஏன்?’ என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 2 வார காலத்துக்குள் பதில் அளிக்க கெடு விதித்துள்ளது.

சுருக்குமடி வலை யைப் பயன்படுத்தி மீன் பிடிப்ப தற்கு தமிழ் நாடு அரசு தடை விதித் திருந்ததை எதிர்த்து மீனவர்கள் மற்றும் மீனவர் அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ் நாட்டின் 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டல கடற்பரப்பில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கி 2.9.2026 அன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சுருக்கு மடி வலையை எடுத்துச் செல்ல தமிழ்நாடு அரசு அனுமதிக்க வில்லை எனக்கு கூறி விழுப் புரத்தைச் சேர்ந்த மீனவர்கள், உச்சநீதிமன்றத் தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மீனவர்கள் வழக்குரைஞர் ஜெய்சுகின் ஆஜராகி, ‘‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னரும் சுருக்குமடி வலையை எடுத்துச்செல்ல தமிழ்நாடு அரசு அனுமதிப்பதில்லை.

சுருக்குமடி வலை யுடன் மீனவர்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டல கடற்பகுதிக்குச் செல்வதற்கான அனுமதி களை தமிழ்நாடு அரசு வழங்காமல் நூற்றுக் கணக்கான விண்ணப் பங்கள் கிடப்பில் போடப் பட்டுள்ளன.

எனவே இது தொடர் பாக உரிய உத்தரவை தமிழ்நாடு அரசுக்கு பிறப் பிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். அந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘மீன்பிடி தடைக்காலம் இல்லாத நிலையிலும் சுருக்குமடி வலையை எடுத்துச்செல்ல ஏன் அனுமதிக்கவில்லை?.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழ்நாடு அரசு அதனை செயல்படுத்தாமல் சுருக்குமடி வலையை முழுமையாகத் தடுப்பதை ஏற்க முடியாது.

இந்த விவகாரத்தை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த செயல்பாடு சரியானது அல்ல. இது குறித்து தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதி லளிக்க வேண்டும்’ என தாக்கீது பிறப்பித்து உத்தர விட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *