‘இரண்டாம் வகுப்பு பயணிகள்’ என்ற சொல்லை மாற்றவேண்டும்! ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 19– ‘இரண்டாம் வகுப்பு’ பயணிகள் என்ற சொல்லை மாற்ற வேண்டும் என்று ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானது என்று கூறியுள்ளது.
ரயில்வே விபத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கரோல், கோடீஸ்வர் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரயில் நிலையங்களில் நிலவும் அதிகப்படியான கூட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுவும் விபத்துக்களுக்கு காரணமாக உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பின்னர், இரண்டாம் வகுப்பு பயணி என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது பயணக் கட்டணம் தொடர்புடையது என்றாலும் அரசியல மைப்புச் சட்ட உணர்வுகளுக்கு முரணானதாக உள்ளதாக கூறினர். எனவே, இரண்டாம் வகுப்பு பயணி என்று குறிப்பிடக்கூடாது என்று தெரி வித்தனர். உயர்வகுப்பு, கீழ் வகுப்பு பயணிகள், இரண்டாம் வகுப்பு பயணி கள் என்று ரயில்வே துறை பயணி களை குறிப்பிடுவதை கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *