உத்தரப்பிரதேசத்தில் வன்முறை மாநில அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி அக்.1- கடந்த 2024 நவம்பரில் உத்தரபிரதேசத்தின் சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆய்வு நடந்தபோது வன்முறை வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக முல்லா அஃப்ரோஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முல்லா அஃப்ரோஸ் மேல்முறையீடு செய்தார்.

அப்போது நீதிபதிகள், ‘‘காவல் துறையிடம் அளித்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க முடியாது. முல்லா அஃப்ரோஸ் மீதான தடுப்புக் காவல் உத்தரவு மற்றும் அதனை உறுதி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. உத்தரபிரதேச அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது,’’ என்று உத்தரவிட்டனர்.

கொடைக்கானலில் 15 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு

பேரிடர் சிறப்புக் குழு தயார்!

பழநி, அக். 01- கொடைக்கானலில் 15 இடங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டும், மலையை வெட்டியும் சட்டத் துக்கு புறம்பாக காட்டேஜ்கள், ரிசார்ட்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகின்றன.

இதனால் கொடைக்கானல் மலை கட்டடங்களின் காடாக மாறி வருகிறது. இங்கு மழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. மேலும், அண்மையில் பேரிடர் மேலாண்மைக் குழு கொடைக் கானல் மலைப்பகுதியில் ஆய்வு நடத்தியது. அதில், கொடைக்கானல் அருகேயுள்ள குருசரடி, சவரிக்காடு, கோம்பைக்காடு உள்ளிட்ட 15 இடங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த இடங்களில் நிலச்சரிவை தடுப்ப தற்கான நடவடிக்கைகளை பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை உட்பட அனைத்து துறை களையும் உள்ளடக்கி 28 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழு பேரிடரை சமாளிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதிக மழையின்போது மண் சரிவு உள்ளிட்ட அசம்பாவிதம் நடக்கும்போது உடனடியாக பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மணல் மூட்டைகள், மரம் வெட்டும் கருவி, பொக்லைன் இயந்திரம், மீட்பு வாகனம் உட்பட தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *