லிபியா: 61 அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 51 பேர் உயிரிழப்பு?

1 Min Read

பெங்காஜி, ஜூன் 22- லிபியா அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 51 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து அய்ரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த படகில் 61 பேர் பயணித்து உள்ளனர். அந்த படகு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது திடீரென நடுக்கடலில் கவிழ்ந்தது.

ராணுவம் மற்றும் கடற்படை

இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அவர்களில் 10 பேர் நீந்தி உயிர் தப்பியுள்ளனர். மற்ற 51 பேர் நீரில் அடித்து செல்லப் பட்டனர். அவர்கள் உயிரிழந்து இருக்க கூடும் என தகவல் வெளி யாகி உள்ளது.

அவர்களில் ஒரு சிறுமி உள்பட 15 பேரின் உடல்கள் கரையோரம் ஒதுங்கின. அவற்றை செம்பிறை சங்கத்தினர் மீட்டு, கரையில் கிடத்தினர். படகு விபத்தில் காணாமல் போன மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ராணுவம் மற்றும் கடற்படை ஈடுபட்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *