குமாரபாளையம், செப். 30- குமாரபாளையத்தில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் விழா சமூக நீதி நாள் விழா கழகப் பொதுக்கூட்டமாக குமாரபாளையம் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்செங்கோடு மாவட்ட கழகத் தலைவர் சு.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர் ஆ.கு.குமார் அனைவரையும் வரவேற்றார். கழக ஒருங்கிணைப்பாளர் ஊ ஜெயராமன் தொடக்க உரையாற்றினார்.
கழக சொற்பொழிவாளர் தே.நர்மதா, தந்தை பெரியார் பற்றி யும், அவர்கள் கடந்து வந்த பாதை பற்றியும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிறப்பாக எடுத்துரைத்தார்.
சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, செயலாளர் சரவணன், நாமக்கல் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வை.பெரியசாமி, தொழிலாளர் மாநில துணைத்தலைவர் வீர.முருகன், பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் க.பொன்னுசாமி, திருச்செங்கோடு கழக மாவட்ட துணைச் செயலாளர் மு சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தெற்கு நகர திமுக பொறுப்பாளர் கே.ஏ.ரவி, அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்கள் முன்னி லையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கேக் (10 கிலோ) வெட்டி பொதுமக்கள், தோழர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் ஏ.ஜானகி ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கே.கணேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பவானி ஒன்றிய செயலாளர் கண்ணன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சித்ரா பாபு, நகர பொறுப்பாளர் வரதராஜன், தேமுதிக நகரச் செயலாளர் டி.ஆர்.நாராயணசாமி, தமிழ் தேசிய பேரியக்கம் நகரத் தலைவர் நா.ஆறுமுகம், மொழிப்போர் தியாகிகள் நினைவுத் தூண் அமைப்புக்குழு தலைவர் மல்லை ராமநாதன், இலக்கியத்தளம் தலைவர் நாகு அன்பழகன், பஞ்சாலை பி.சண்முகம், சந்திரா தண்டபாணி, வடிவேல், மோகன், தேவி, மாதேஷ், பிரகாஷ் குமார், மணியம்மை, கார்த்தி மற்றும் கழகத் தோழர்கள் ச.பத்மாவதி, ரம்யா, இந்துமதி, ஜனனி, எழிலரசன், பெரியார் பிஞ்சுகள் இளமாறன், இயல், தீரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர கழகத் தலைவர் ராசசேகர் நன்றி கூறினார்.
