‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகள் இன்று ஆலோசனை மம்தா, இடதுசாரிகள் தவிர பிற கட்சிகள் வருகையை உறுதிப்படுத்தவில்லை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப். 30- தலைமைத் தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இண்டியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா மற்றும் இடதுசாரி கட்சித் தலைவர்கள் மட்டுமே உறுதிப்படுத்தி உள்ளனர்.

மம்தாவுடன் அவரது மருமகனான அபிஷேக் கலந்து கொள்கிறார். இவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுனா கார்கேவும் பங்கேற்க உள்ளனர்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், மாநிலங்களவை தேர்தலைக் காரணம் காட்டி,இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறி விட்டார். தனக்கு பதிலாக அடுத்தகட்ட தலைவர் யாரையாவது அனுப்புவதாகக் கூறியுள்ளார். சிவசேனாவின் உத்தவ் தாக்கரே காணொலி மூலம் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வரை ‘இண்டியா’ கூட்டணி யின் பல உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தவில்லை. இப்பட்டியலில், தேசிய வாத காங்கிரஸ் (எஸ்பி) சரத் பவார், ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரண், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அக்கட்சி சார்பில் எவரும் கலந்துகொள்கிறார்களா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *