யுபிஅய் கட்டண விவகாரம்: ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப். 29- ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியான யுபிஅய் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக நான்கு வாரங்களில் விளக்கம் தருமாறு ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஅய்-க்குத் தாக்கீஐ அனுப்பியுள்ளது.

இருப்பினும் வரும் அக்.15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதி யான யுபிஅய் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வழக்குரைஞர் அஞ்சன் தத்தா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘புதிய யுபிஅய் கட்டணங்களால் வணி கர்கள் இந்தக் கூடுதல் செலவை நுகர்வோர் மீது சுமத்துவர். எனவே இது சாமானிய மக்களைப் பாதிக்கும்.

எனவே, யுபிஅய் பணப் பரி வர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்’ என்று வலி யுறுத்தி இருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செப்.28) விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அடிப்படை தேவைகளுக்கான யுபிஅய் பரிவர்த்த னையின் போது வசூலிக்கப்படும் கட்டணம் ‘வரியா அல்லது கட்ட ணமா?’ என்பது குறித்து விளக்க வேண்டும். இது குறித்து ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக விளக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

ஒன்றிய அரசு சார்பில் இந்த வழக்கில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் என்.வெங்கட ரமணன், ‘யுபிஅய் கட்டண விவ காரத்தில் 96 சதவீத பயனாளிகள் எந்தவிதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. யுபிஅய் கட்டணம் அரசுக்கு சேராது. அது அந்தப் பரிவர்த்தனையை மேற்கொள்ள உதவும் வங்கி மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்குச் செல்லும்’ என்று தெரிவித்தார்.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஅய்-க்கு தாக்கீது அனுப்பி உள்ளது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் அக்.15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியான யுபிஅய் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூ லிக்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *