சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி ஓர் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தவர் சர் ஜான் மார்ஷல்!
தமிழ்நாடு முழுவதும் ஆய்வறிஞர்களுடைய கருத்தரங்கம் தொடர்ந்து நடக்கும்!
தமிழ்நாடு முழுவதும் ஆய்வறிஞர்களுடைய கருத்தரங்கம் தொடர்ந்து நடக்கும்!
‘‘பண்பாட்டுப் பாதுகாப்பு படையெடுப்புப் பிரச்சாரம்’’
பூம்புகாரில் தொடங்கி, மாமல்லபுரத்தில் முடியும்!
பூம்புகாரில் தொடங்கி, மாமல்லபுரத்தில் முடியும்!
சென்னை, செப்.28 சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி ஓர் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தவர் சர் ஜான் மார்ஷல்! தமிழ்நாடு முழுவதும் ஆய்வறிஞர்களுடைய கருத்தரங்கம் தொடர்ந்து நடக்கும்! ‘‘பண்பாட்டுப் பாதுகாப்பு படையெடுப்புப் பிரச்சாரம்!’’ பூம்புகாரில் தொடங்கி, மாமல்லபுரத்தில் முடியும்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி ஓர் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தவர் சர் ஜான் மார்ஷல்! தமிழ்நாடு முழுவதும் ஆய்வறிஞர்களுடைய கருத்தரங்கம் தொடர்ந்து நடக்கும்!
- ‘‘பண்பாட்டுப் பாதுகாப்பு படையெடுப்புப் பிரச்சாரம்’’ பூம்புகாரில் தொடங்கி, மாமல்லபுரத்தில் முடியும்!
- திராவிட நாகரிகம் – சிந்துவெளி அகழாய்வு 102 ஆம் ஆண்டு விழா – ‘‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்!’’
- மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும்!
- உலக மக்களால் கொண்டாடப்படுகிற தமிழ் மொழி, நீஷ பாஷையாம்!
- தமிழ் மொழியைக் கொச்சைப்படுத்தியது யார்?
- வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்!
- கலைஞரின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக வெளியிட்ட ‘இந்து’ பத்திரிகை!
- ‘ஹிந்தி அபிஷியல் லாங்குவேஜ்’ என்கிற தலைப்பில்…
- சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி ஓர் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தவர் சர் ஜான் மார்ஷல்!
- வெறும் மொழிக்காக அல்ல; பண்பாட்டுத் திணிப்பதைத் தடுப்பதற்காகத்தான்!
- பூம்புகாரில் பிரச்சாரத்தைத் தொடங்கி, மூன்று நாள்களில் மாமல்லபுரத்தில் முடிக்கப் போகிறோம்!
- மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கப் போகிறோம்!
- தமிழ்நாடு முழுவதும் ஆய்வறிஞர்களுடைய கருத்தரங்கம் தொடர்ந்து நடக்கும்!
திராவிட நாகரிகம் – சிந்துவெளி அகழாய்வு 102 ஆம் ஆண்டு விழா – ‘‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்!’’
கடந்த 22.9.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், திராவிட நாகரிகம் – சிந்துவெளி அகழாய்வு 102 ஆம் ஆண்டு விழா – ‘‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை உரை வருமாறு:
மானமும், அறிவும் உள்ள
சமுதாயமாக ஆக்க வேண்டும்!
சமுதாயமாக ஆக்க வேண்டும்!
‘‘இந்தத் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும்’’ என்று தந்தை பெரியார் ஆசைப்பட்டார். அவர்கள் ஆசைப்பட்டது மட்டுமல்ல நண்பர்களே, அதுவே தனது தலையாய பணி என்று பிரகடனம் செய்தார். ஆரியப் பார்ப்பனர்கள், மக்களைப் பிரித்தது மட்டுமல்ல, மொழியில் பேதம் உண்டாக்கினார்கள். பண்பாட்டிலே தலையாயது எது? மொழி. செம்மொழியான தமிழை, அந்த மொழியையே, மரியாதைக் குறைவாக ஆக்கி னார்கள்.
நாம் ஏன் சர் ஜான் மார்ஷலைப் பாராட்டுகிறோம்? ஏன் திராவிட நாகரிகம் பற்றிச் சொல்கிறோம்? ஆரிய நாகரிகம் வேறு என்று சொல்லும்போது, ஒன்றே ஒன்று. சர் ஜான் மார்ஷல் அவர்களைப் போன்று வெளிநாட்டுக்காரர்கள் வந்தார்கள் அல்லவா! கால்டுவெல், பெஸ்கி போன்றவர்கள் வந்தார்கள். ‘‘அவர்கள்தான் நம்மை அடிமைப்படுத்தினார்கள்; அல்லது வெள்ளைக்காரர்கள்தான் அவர்களுடைய மதத்தைப் பரப்புவதற்காக வந்தார்கள்’’ என்று சொல்கிற வாதங்கள் ஒருபக்கத்தில் இருக்கட்டும். ஆனால், அவர்கள் தமிழுக்குச் செய்திருக்கிற தொண்டை, பார்ப்பனர்கள் செய்திருக்கிறார்களா? ஆரியம் செய்திருக்கிறதா? செய்ய வேண்டாம்; ஆனால், இருப்பதைக் கெடுக்காமல் இருக்க வேண்டாமா? அதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
உலக மக்களால் கொண்டாடப்படுகிற தமிழ் மொழி, நீஷ பாஷையாம்!
அவர்கள் சொன்னது என்ன? சமஸ்கிருதம் மக்களால் பேசக்கூடிய மொழியல்ல; ஒரு செத்த மொழி – ஆரிய மொழி – அந்த ஆரிய மொழியைப் பார்த்தீர்களானால், ‘தேவ பாஷை’ என்றார்கள். திராவிடம், தமிழ் மொழி – செம்மொழி என்கிற தமிழ், உலக மக்களால் கொண்டாடப்படுகிற அந்தத் தமிழ் நீஷ பாஷையாம்.
வெள்ளைக்காரன் சொன்னானா? ஆங்கிலம் அரசு மொழியாக வந்திருக்கலாம்; அதுவும் அவாள்தான் முதலில் ஆங்கிலத்தைப் படித்த வர்கள், மற்றவர்கள் அல்ல. அப்படி இருந்தா லும், வெள்ளைக்காரர்களைப் பொறுத்த வரையில் ஆங்கிலத்தைத்தான் அவர்கள் பெரு மைப்படுத்துவார்கள் என்று நினைத்தாலும் கூட, தமிழ் மொழியைப் பெருமைப்படுத்தினார்கள். இன்னும் தமிழுக்குரிய அந்தஸ்தைத் தந்தார்கள். திருக்குறள் போன்ற நூல்கள் ஆங்கிலத்தில் வந்ததினால்தான் உலகம் முழுவதற்கும் போயிற்று.
தமிழ் மொழியைக்
கொச்சைப்படுத்தியது யார்?
கொச்சைப்படுத்தியது யார்?
எனவே, பாஷையிலே, நீஷ பாஷை என்று என்ன இருக்கிறது? ‘‘கீழ்த்தர மக்களிடம் தமிழில் பேசினால், தீட்டாயிடும்’’ என்பார்கள். சங்கராச்சாரியார் பூஜை செய்துவிட்டார் என்றால், அதற்குப் பிறகு தமிழில் பேசமாட்டார். இப்படித் தமிழை மொழியைக் கொச்சைப்படுத்தியது யார்? நினைத்துப் பார்க்க வேண்டும்.
வஞ்சகர் வந்தவர்
தமிழாற் செழித்தார்!
தமிழாற் செழித்தார்!
எனவேதான், பண்பாட்டுப் படையெடுப்பு என்பதை எதிர்க்க வேண்டும். அந்தப் பண்பாட்டுப் படையெடுப்ைபத்தான் –
‘‘வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்!
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்!
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்!
நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்!
தமிழனே இது கேளாய்!’’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
இதுதான் இன்றைக்குப் பண்பாட்டு படையெடுப்பு.
ஆகவேதான், இதை உணர்ந்து கொண்டு சொல்கி றோம். இன்னமும் சொல்கிறோம், நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
திராவிடம் என்பது தத்துவம்!
திராவிடம் என்பது சமத்துவம்!
அது இந்த இடமா? அந்த மொழியா? என்று சொல்வதை விட, அந்த மொழியின்் பண்பாடு அதற்கு அடிப்படையானது. ஆகவே, இதற்கு எங்கே மூலாதாரம் இருக்கிறதோ, அந்த மூலாதாரத்தையே அழிக்க வேண்டும் என்பதுதான் ஆரியத்தினுடைய திட்டம். அதனால்தான், ‘‘சிந்துவெளி நாகரிகம் பின்னாளில் வந்தது, அது எங்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டது’’ என்று சொல்வார்கள். அதற்குரிய வாதங்களைச் சொல்வார்கள்.
கலைஞரின் வாழ்க்கை வரலாற்றைப்
புத்தகமாக வெளியிட்ட ‘இந்து’ பத்திரிகை!
புத்தகமாக வெளியிட்ட ‘இந்து’ பத்திரிகை!
இன்னொரு செய்தி உங்களுக்குச் சொல்ல வேண்டும். அது என்னவென்றால், ‘இந்து’ பத்தி ரிகை கலைஞர் அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஒரு பெரிய புத்தகமாக வெளியிட்டார்கள். அதற்காக எல்லோரிடமும் பேட்டி எடுத்து, தமிழில் வெளியிட்டார்கள், இன்றைக்குப் பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.
அதில், பிரபலமாக இருக்கக்கூடிய, கேரளத்தைச் சார்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளர். அவர் ஒரு கருத்தை எழுதினார். அது என்னவென்றால், தந்தை பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் இவர்கள் எல்லாம் அரிய பெரியதொரு காரியத்தைச் செய்தார்கள். மற்றவர்கள் எல்லாம் என்ன சொல்வார்கள், திராவிடர் இயக்கம் என்று பெயர் உள்ளதைக் கண்டு, உடனே ‘‘ஓகோ, இது ஒரு பெரிய இனவாதம்; ‘எத்தினிக் குரூப்’ என்று சொல்லக்கூடிய இனவாதம் என குமுறுவார்கள். அந்த இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று ஆகாமல், திராவிடம் என்பது பண்பாட்டுப் படையெடுப்பில் இருந்து நம்மைக் காப்பாற்றுகின்ற ஓர் இயக்கம் என்று, பெரியாரும் – அண்ணாவும் அந்த வழியிலே கொண்டு போனதினால், உச்சக்கட்டத்தில் நம் பண்பாடு பெருமையடைந்தது. இதில் இருப்பதினுடைய தத்துவம் என்ன? ஒரு மொழி என்பதனாலா? இல்லை. அதன் மூலமாக ஒரு பண்பாட்டை அழித்து, இன்னொரு பண்பாடு வருகிறது. தமிழ் மொழி நீஷ பாஷை, சமஸ்கிருதம் தேவ பாஷை என்று அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.
‘ஹிந்தி அபிஷியல் லாங்குவேஜ்’ என்கிற தலைப்பில்…
அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்கள் எவ்வளவு சாமர்த்தியமாக அதை உள்ளே நுழைத்தார்கள். அரசி யலமைப்புச் சட்டத்தில் எங்கே இருக்கிறது? என்று கேட்கலாம். ‘ஹிந்தி அபிஷியல் லாங்குவேஜ்’ என்கிற தலைப்பில் வருகிற போது, ‘‘ஹிந்தி, தட் இஸ் இன் தேவநகரி ஸ்கிரிப்ட்’’ இதுதான் அதிலிருக்கும் வார்த்தை. என்ன அர்த்தம்? நம்ம ஆட்கள், தேவநகரி என்று மட்டும் படித்துவிட்டுப் போய்விடுவார்கள். வக்கீலாக இருந்தாலும், நீதிபதியாக இருந்தாலும். அதில் உள்ள விஷத்தைப் பார்க்கவேண்டும். அதை பெரியார் கண்ணாடியினால்தான் பார்க்க முடியும்; வேறு கண்ணாடியினால் பார்க்க முடியாது.
தேவநகரி என்றால், தேவபாஷை எழுத்துக்கள். ஏன், திருமணத்திலிருந்து, கருமாதி வரையில் தேவபாஷை. ஆனால், அது செத்த மொழி. ஆனால் தேவபாஷை மட்டும் உயிரோடு அரசியலமைப்புச் சட்டத்தில் அமர்ந்து கொண்டது.
சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி ஓர் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தவர்
சர் ஜான் மார்ஷல்!
சர் ஜான் மார்ஷல்!
சர் ஜான் மார்ஷல் அவர்கள், 200 ஆண்டு களுக்கு முன்னால், சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி இவ்வளவு பெரிய ஒரு செய்தியை நமக்குக் கொடுத்து, ஓர் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தார்கள். அசைக்க முடியாமல் இருக்கிறது என்று சொல்வதை ஏன் கொண்டாட வேண்டும் என்று சொன்னால், பண்பாட்டு நாகரிக அடிப்படை யிலே கொண்டாடுகின்றோம்.
வெறும் மொழிக்காக அல்ல; பண்பாட்டுத் திணிப்பதைத் தடுப்பதற்காகத்தான்!
எனவேதான், இதை பரவலாக ஆக்க வேண்டும் என்பதற்காக நண்பர்களே, இந்த ஆண்டு முழுவதும் பல இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். திராவிடர் கழகமே, திராவிடர் இயக்கமே சமஸ்கிருதம், ஹிந்தி மொழியை எதிர்ப்பதும் கூட, வெறும் மொழிக்காக அல்ல; பண்பாட்டுத் திணிப்பதைத் தடுப்பதற்காகத்தான். சமஸ்கிருத கலாச்சாரத்தை உண்டாக்க வேண்டும் என்பது அவாளது அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, நாம் திராவிடம் என்று சொல்வது, இடத்தை மட்டும் குறிப்பது அல்ல; அது ஓர் இனத்தைக் குறிப்பதோடு, இரத்த ஆராய்ச்சி செய்து, திராவிடம் என்பது நம்முடைய பண்பாட்டின் ஒட்டுமொத்த அடையாளமாகும். பண்பாட்டு அடிப்படைக்கு இன்னும் நீங்கள் வரவில்லையே! இன்னமும் நீங்கள் ஒன்றாக வில்லையே! இன்னமும் ஜாதி உணர்வுகளைத் தானே வைத்திருக்கிறீர்கள். ஆனால், எங்களுடைய இனம், வள்ளுவருடைய திருக்குறளில், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.’’ இந்த ஒன்று போதுமே! இதில் பெண்கள் ஒருபோதும் அடிமையாக மாட்டார்கள். அங்கே பெண்கள் நிரந்தரமாக அடிமைகளிலும், அடிமை என்று ஆக்கப்பட்டிருக்கிற ஒரு கலாச்சாரம்.
பூம்புகாரில் பிரச்சாரத்தைத் தொடங்கி, மூன்று நாள்களில் மாமல்லபுரத்தில் முடிக்கப் போகிறோம்!
எனவே நண்பர்களே, இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பண்பாட்டைப் பிரச்சாரம் செய்வதற்காக வருகின்ற நவம்பர் மாதம், இந்த ஆண்டு முழுவதும் செய்கிறோம். அதில் ஒரு பகுதியாக, என்ன செய்யப் போகிறோம் என்று சொன்னால், திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு திட்டம் ஏற்கெனவே தயாராகி இருக்கிறது. மழைக் காலம் என்பதினால், நவம்பர் மாதத்தில் நடத்தவிருக்கிறோம். பூம்புகாரைச் சிறப்பாக உருவாக்கினார் கலைஞர் அவர்கள். அந்த பூம்புகாரை எடுத்துக் கொண்டால், சிலப்பதிகாரத்திேலயே, பண்பாட்டுப் படை யெடுப்பு உள்ள நுழைந்துவிட்டது. மாமுது பார்ப்பான் உள்ளே நுழைந்துவிட்டார். அப்பேர்ப்பட்ட நிலையில், நாங்கள் பூம்புகாரில் பிரச்சாரத்தைத் தொடங்கி, மூன்று நாள்களில் மாமல்லபுரத்தில் முடிக்கப் போகிறோம். ‘‘பண்பாட்டு பாதுகாப்பு படையெடுப்பு பிரச்சார முறை’’ என்று சொல்லி.
மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கப் போகிறோம்!
இடையில் சில நாள்கள் இருக்கின்றன – ஒவ்வொரு ஊரிலேயும், நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து பிரச்சாரத்தை நடத்தி கொண்டு வந்து, ஒரு விழிப்புணர்வை உண்டாக்கப் போகிறோம். அதில், சர்ஜான் மார்ஷல் போன்றவர்கள், திராவிட இயக்கத்தி னுடைய பண்பாட்டைப் பற்றிச் சொல்லுவதை, திராவிட இயக்கம், ஆரியரை இணைத்துக் கொள்ளாத திராவிடர் இயக்கமாக ஏன் இருக்கிறது என்பதை விளக்கிச் சொல்லுகிறோம். ஆரியத்தை நாம் எதிர்ப்பது எந்த அடிப்படையில் என்று மக்களுக்குச் சொல்ல வேண்டும். ஏனென்றால், அடிப்படைகள் மிக முக்கியமானது.
அவர்களுடைய நோக்கம் எல்லாம், வேத காலத்தைக் கொண்டு வந்து திணிப்பதினுடைய நோக்கம் என்ன? அடித்தளத்தை அழிக்க வேண்டும். அவர்களுடைய தொலைநோக்கு அது – மிக ஆழமான சிந்தனை – அதற்கு ஒரு பெரிய குழுவையே வைத்திருக்கிறார்கள். அதுதான் ஆர்எஸ்எஸ்சினுடைய திட்டம்.
எனவே தான், இந்த நிகழ்ச்சி, எளிய நிகழ்ச்சி போல் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இது மிக ஆழமான ஒரு நிகழ்ச்சி. ‘‘விதைகள் விதைக்கப்படும் போது, உள்ளே சிறிய விதைகளாகத்தான் இருக்கும். பெரிய ஆலமரம், அந்த விதையிலிருந்து தான் கிளம்புகிறது’’ என்பதை யாராவது மறுக்க முடியுமா தோழர்களே?
தமிழ்நாடு முழுவதும் ஆய்வறிஞர்களுடைய கருத்தரங்கம் தொடர்ந்து நடக்கும்!
ஆகவேதான், இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நேரத்தில், நாம் கேட்டபோது, முனைவர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் தங்க ளுடைய பணிகளை எல்லாம் விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அதனால்தான் நான், என்னுடைய மருத்துவர் ஆலோசனையையும் தாண்டி, அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வந்தேன். நான் வராமல் இருக்க விரும்பவில்லை. நினைத்ததை, கூடுதலாகப் பேசிவிட்டேன். ஆகவே, நான் சற்று நேரத்தில் விடைபெற்றுக் கொண்டாலும் கூட, மற்றவர்களுடைய உரையை இறுதிவரைக் கேளுங்கள். இந்த உரை, வழக்கமாக மற்ற உரைகள் எல்லாம் எப்படிப் புத்தகங்களாக வந்திருக்கின்றனவோ, அதேபோல இந்த நிகழ்வைப்பற்றியும் புத்தகங்கள் வரும். தமிழ்நாடு முழுவதும் ஆய்வறிஞர்களுடைய கருத்தரங்கம் தொடர்ந்து நடக்கும். அதையெல்லாம் விட பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில், திராவிடப் பண்பாட்டுப் படையெடுப்பு எப்படிப்பட்டது என்பதை ஒரு பகுதியாக, இளைய தலைமுறைக்கு, ஜென்–சி என்று சொல்லுகிறார்கள் அல்லவா, அந்தத் தலைமுறைக்கும் சேர்த்து இதைச் செய்வோம் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க திராவிடம்!
‘‘திராவிடம் வெல்லும்! அதை வரலாறு என்றைக்கும் சொல்லும், சொல்லும்!’’ இது உறுதி!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
