‘எல் நினோ’ தாக்கத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 28 எல். நினோ தாக்கம் எதிரொலியாக, தமிழ் நாட்டில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊட கங்களில் டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:

மிகத் தெளிவான மேகங்கள் இல்லாத செயற்கைக்கோள் படம். சூப்பர் எல் நினோ முதல்கட்ட தாக்கமான நீடித்த கோடை, அதித வெப்பம், இயல்பிற்கு அதிக வெப்பநிலை அடுத்த 3 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் தீவிரமாக இருக்கும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பகல் நேர வெப்பநிலை இயல்பி லிருந்து 3-4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இடையிடையே இரவில் ஆங்காங்கே வெப்பச்சலன மழை பதிவானாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

அதிகமான நீர்சத்துடைய ஆகாரங்கள், பழங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

வேளாண் பணிகளை மேற் கொள்ளும் விவசாயிகள் முற்பகல், மாலை நேரத்தில் வேளாண் பணி களை திட்டமிடுங்கள். நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலான காலக்கட்டத்தில் நேரடி வெயில் தாக்கத்தை தவிர்ப்பது நல்லது.

நேரடி நெல் விதைத்துள்ள விவசாயிகள், முளைத்து வரும் இளம் பயிர் விவசாயிகள் உடனடி யாக பயிர்களுக்கு தேவையான நீரை வையுங்கள்.

செப் 29, 30இல் உள் மாவட்டங் களில் இரவில் இடிமழை பதிவாகும். காவிரி டெல்டா மற்றும் கடலோரத்தில் பயிர் முளைப்பிற்கு ஏற்ற மழை இல்லை. எனவே தயவு செய்து தண்ணீரை இறைத்தாவது இளம் பயிரை காப்பாற்றுங்கள். உங்கள் வாய்க்காலுக்கு தண்ணீர் வரவில்லை எனில் அதிகாரிகளை தொடர்புகொண்டு தண்ணீரை கேட்டு பெற நடவடிக்கை எடுங்கள்” என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *