திப்ருகர், செப்.28 சட்டவிரோத குடியேறிகள் என்றுகூறிகொண்டு வாக்குவங்கிக்காக அம்மக்களை பழிவாங்கிய அமித்ஷா சில தனியார் நிறுவனங்களின் வாபத்திற்காக பிரம்மபுத்திரா நதி வழியே வங்கதேசத் துக்கு மெத்தனால் ஏற்றுமதி செய்யப் படவுள்ளது. அசாம் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் (ஏபிஎல்) சார்பில் இந்த மெத்தனால் ஏற்றுமதி நடைபெறுகிறது. இதற்காக அசாம் மாநில அரசின் உள்நாட்டு நீர்வழித்தட போக்குவரத்துத் துறையிடம் இருந்து 2 கப்பல்களை ஏபிஎல் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.
30 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்ட கப்பல்கள்:
ஏபிஎல் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ள இந்த 2 கப்பல்களும் பழுது காரணமாகக் கடந்த 30 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தன. தற்போது அவை குவாஹாட்டியில் முழுமையாகப் பழுதுபார்க்கப்பட்டு, மெத்தனால் ஏற்றுமதிக்குப் பயன் படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து ஏபிஎல் நிறுவனத்தின் தலைவர் பிகுல் தேக்கா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “சுதந்திரத்துக்குப் பின் முதல்முறையாகத் திப்ரூகரில் இருந்து வங்கதேசத்துக்கு நதி வழியே ஏற்றுமதி தொடங்கப்படவுள்ளது” என்று உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், திப்ரூகரில் இருந்து வங்கதேசத்துக்கு எந்தத் தேதியிலிருந்து இந்த மெத்தனால் கப்பல்கள் புறப் படும் என்ற துல்லியமான விவரங் களை அந்நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஒருபுறம் சட்டவிரோத வங்கதேசக் குடியேறிகள் விவகாரம் குறித்த அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மற்றொருபுறம் அம் மாநில அரசு நிறுவனமே நீர்வழிப் போக்கு வரத்து வணிகத்தை வங்க தேசத்துடன் தொடங்குவது குறிப்பிடத்தக்க அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
