தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகலைத் தீவிரப்படுத்த செப்.30-இல் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி செப். 28- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்துவது குறித்து விவாதிப்பதற்காக வருகிற 30-ஆம் தேதி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்அய்ஆர்) தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், தேர்தல் ஆணையாளர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக  தகவல்கள் வெளியாகின்றன.

இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் இந்த விவகாரத்தில் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதேபோல இடதுசாரி கட்சிகளும் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளன.

இந்நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் 30-ஆம் தேதி இந்தியா கூட்டணி யின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் நடக்கும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே, திரிணாமூல் காங்கிரஸின் மம்தா மற்றும் அபிஷேக்,  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்  மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத் தின் இருஅவைகளிலும் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வருவது, ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையம் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக் கான கோரிக்கையை தீவிரப்படுத்துவது மற்றும் இந்த விவகாரத்தில் நாடு தழுவிய போராட்டத்திற்கான ஒரு கட்டமைப்பை வகுப்பது ஆகிய மூன்று முக்கிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் இல்லாத அனைத்து எதிர்க்கட்சிகள், சிவில் சமூக உறுப் பினர்கள் மற்றும் அரசியல் நோக் கர்கள் என பல தரப்பினரும் பங்கேற்ற வேண்டும் என சிபிஅய் (எம்எல்)-லிபரேஷன் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *