அரசுப்பள்ளிகளில் மதிய உணவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் திடீர் நிறுத்தம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப்.27 தமிழ்நாட் டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் திடீரென நிறுத்தப் பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தின் அனைத்து 5 வேலை நாட்களிலும் மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று  (26.9.2026) நாமக்கல், ஈரோடு, சேலம், திரு நெல்வேலி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று, அன்றாடம் வழங்கப்பட்ட மதிய உணவில் முட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால் மாண வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு முட்டைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப் படுகிறது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும் போது, கடந்த பத்தாண் டுகளில் இதுபோன்ற ஒரு குறைபாட்டைதாங்கள் கண்டதில்லை. மேலும் காலாண் டுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பள்ளிகளின் செயல்பாடு குறித்த தகவல் தொடர்பில் ஏற் ட்ட குழப்பத்தால் இந்த நிகழ்வு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் முட்டைகளின் தேவை குறித்த தகவல் பரிமாற்றக் குறைபாடு காரணமாக, சில மாவட்டங்களில் உள்ள அதிகாரி கள் விநியோகஸ்தர்களுக்கு தகவல் அனுப்பத்தவறியதால் இந்த குளறுபடி ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வு நடந்தது இதுதான் முதல் முறை என சத்துணவுப் பணியாளர்கள் கூறினர் .இதற்கிடையில், தமிழ்நாடு உயர் மற்றும் மேல்தி லைப்பள்ளிபட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.மலைக்கொழுந்தன் கூறியதாவது,

இந்தக் குறைபாடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம்., மாநிலம் முழுவதும் இத்திட்டம் சீராகச் செயல்படுத்தப்பட்ட போதிலும், சில மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டதாகவும், மற்ற மாவட் டங்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த குறைபாட்டிற்குப் பொறுப்பானவர்கள் மீது நட வடிக்கை எடுக்கவும், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட் டைகள் தடையின்றி விநியோகிக் கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வரும் நாட்களில் தடங் கலின்றி முட்டை விநியோகம் செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *