குடியிருப்புகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 31 கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடு பட்டுள்ளனர்.

கோட் டூர்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பக்கிங் காம் கால்வாய் கரையோரப் பகு திகளில் வசித்துவந்த நூற்றுக் கணக்கான எளிய மக்களின் வீடுகள், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கடந்த சில ஆண் டுகளுக்கு முன்பு இடிக்கப்பட் டன. அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப் புகள் கட்டித் தரப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப் பட்டது. அதன்படி, கடந்த திமுக அரசு சார்பில் ரூ.307 கோடி மதிப்பீட்டில் சுமார் 1,800 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, வீடுகள் ஒதுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது அந்த குடியிருப் பில் 195 வீடுகள் காலியாக உள்ளன. இந்த வீடுகளைத் தங்களுக்கு வழங்க வேண் டும் என்று கோரி கோட்டூர் புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப் புகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் நேற்று (30.5.2026) சாலை மறியலில் ஈடுபட்டனர். இடிந்து விழும் நிலையில் உள்ள தங் கள் வீடுகளைக் காலி செய்து விட்டு, காலியாக உள்ள புதிய குடியிருப்புகளில் தங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களி டம் கூறும்போது,”முந்தைய அரசில் அமைச்சர் மா.சுப் பிரமணியன் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் தற்போது அதிகாரி கள் எங்களுக்கு ஒதுக்கப்பட வில்லை என கூறுகின்றனர். இப்போதுள்ள அமைச்சரிடம் கேட்டாலும் முறையான பதில் இல்லை. பல குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றன. தற்போது, நாங்கள் வசிக்கும் குடியிருப்புகள் மிக வும் சிதிலமடைந்து, சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள் ளன. இதுமட்டுமின்றி, இப்பகுதியில் பாதாளச் சாக்கடை வசதி மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படைத் தேவை களும் முற்றிலும் சீர்குலைந்துள் ளன” எனக் கூறினர்.

சாலை மறியல் குறித்த தகவல் அறிந்ததும், காவல்துறையினர்  மற்றும் நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், எங்களுக்கு எழுத்துப்பூர்வமான ஒதுக்கீட்டு ஆணை கிடைக் கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பிடிவாதமாக மக்கள் சாலை யில் அமர்ந்தனர். இதையடுத்து

காவல்துறையினர் போராட்டத் தில் ஈடுபட்டவர்களை வலுக்கட் டாயமாக கைது செய்ய முயன்றபோது, காவல்துறையினருக்கும் மக் களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதன்காரண மாக 5 கிமீ தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *