வரலாற்றை ஒருபோதும் உங்களால் திரிபுவாதம் செய்துவிட முடியாது!
இன்னமும் நாங்கள் உயிரோடு இருக்கிறோம்!
இஸ்மாயில் கமிஷன் ஆதாரப்பூர்வமாக இருக்கிறது!!
இன்னமும் நாங்கள் உயிரோடு இருக்கிறோம்!
இஸ்மாயில் கமிஷன் ஆதாரப்பூர்வமாக இருக்கிறது!!
எஃகுக் கோட்டையான கொள்கைக் கோட்டையை
ஒருபோதும் உங்களால் அசைக்க முடியாது!
ஒருபோதும் உங்களால் அசைக்க முடியாது!
சென்னை, செப்.26 வரலாற்றை ஒருபோதும் உங்களால் திரிபுவாதம் செய்துவிட முடியாது! இன்னமும் நாங்கள் உயிரோடு இருக்கிறோம்! இஸ்மாயில் கமிஷன் ஆதாரப்பூர்வமாக இருக்கிறது!! எஃகுக் கோட்டையான கொள்கைக் கோட்டையை ஒருபோதும் உங்களால் அசைக்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- வரலாற்றை ஒருபோதும் உங்களால் திரிபுவாதம் செய்துவிட முடியாது! இன்னமும் நாங்கள் உயிரோடு இருக்கிறோம்! இஸ்மாயில் கமிஷன் ஆதாரப்பூர்வமாக இருக்கிறது!!
- எஃகுக் கோட்டையான கொள்கைக் கோட்டையை ஒருபோதும் உங்களால் அசைக்க முடியாது!
- “நெருப்பாற்றில் நீந்திய காலம்” கருத்தரங்கம்!
- ரத்தப் பாசத்தை விடக் கொள்கைப் பாசம் கெட்டியானது!
- ‘‘கருஞ்சட்டைகளுக்குச் சல்யூட்’’ என்று சொன்னவர் நம்முடைய ஸ்டாலின் அவர்கள்!
- ‘தன்மான விடுதலையும், தலைவர் கலைஞரும்!’
- பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில், தளபதி மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரை!
- அரை நூற்றாண்டு பொதுவாழ்க்கை அனுபவம் உள்ளவர்!
- “இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை!’’
- ‘ஷா கமிஷன்’ அறிக்கை
- எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது!
- அக்குவேறு ஆணிவேராக சொன்ன நீதிபதி இஸ்மாயில்!
- வரலாற்றை ஒருபோதும் உங்களால் திரிபுவாதம் செய்துவிட முடியாது!
- ‘‘உங்களுடைய வாழ்க்கை இங்கேயே முடிந்தது’’ என்றார் சிறை அதிகாரி!
- பெரியாருடைய குருகுலத்தில் படித்தவர்!
- உங்களை வரலாறு மன்னிக்குமா?
- ‘சிறையிலே இருந்தவர்கள்’ என்று ‘தியாகி’ பட்டம் போட்டுக் கொண்டதில்லை நாங்கள்!
- எங்களிடமிருந்துதான் அடிப்பதற்கு ஆரம்பித்தார்கள்!
- எங்கள் வீட்டுப் பெண்மணிகளை இழிவுபடுத்தக்கூடிய வார்த்தைகள்!
- வரலாற்றை யாராலும் சுலபமாக அழித்துவிட முடியாது!
- இஸ்மாயில் விசாரணை ஆணைய அறிக்கையில் 50 ஆவது பக்கத்தில்…
- ‘ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசிகள்!’
- பெரியாரின் நெஞ்சுரம், அண்ணாவின் கனிவு!
- இன்னமும் நாங்கள் உயிரோடு இருக்கிறோம்! இஸ்மாயில் கமிஷன் ஆதாரப்பூர்வமாக இருக்கிறது!
- எஃகுக் கோட்டையான கொள்கைக் கோட்டையை ஒருபோதும் உங்களால் அசைக்க முடியாது!
“நெருப்பாற்றில் நீந்திய காலம்” கருத்தரங்கம்!
்கடந்த 18.9.2026 அன்று மாலை 6.30 மணிக்கு, சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற “நெருப்பாற்றில் நீந்திய காலம்” எனும் தலைப்பில் மிசாக் காலக் கொடுமைகளை விளக்கும் மாபெரும் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ரத்தப் பாசத்தை விடக்
கொள்கைப் பாசம் கெட்டியானது!
கொள்கைப் பாசம் கெட்டியானது!
‘‘தம்பி, தைரியமாக இருங்கள்’’ என்று சொன்னேன். ‘‘இதுதான் உங்களுக்கு முதல் அனுபவம்’’ என்று கையைப் பிடித்தேன். கையைப் பிடித்து அவரைக் காப்பாற்றக்கூடிய அளவிற்குத் தழுவித் துடைத்து விட்டோம். அவர் மாமனிதர் என்பதற்கு அடையாளம், அன்றும், இன்றும், என்றும் அந்த நன்றியை அவர் மறப்பதில்லை. ரத்தப் பாசத்தை விட, எங்கள் கொள்கைப் பாசம் கெட்டியானது, மாற்ற முடியாது.
‘‘கருஞ்சட்டைகளுக்குச் சல்யூட்’’ என்று சொன்னவர் நம்முடைய ஸ்டாலின் அவர்கள்!
இன்றைக்கு உங்களுக்குச் சொல்கிறேன், தந்தை பெரியார் அவர்களுடைய 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மலர் நேற்று (17.9.2026) வெளியாகியிருக்கிறது. இந்த மலருக்கு ஆண்டுதோறும் அவரிடம் கட்டுரை கேட்போம். கலைஞர் இருக்கும்போது கலைஞர் அனுப்புவார், அண்ணா அனுப்புவார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினை மறைமலைநகரில் கொண்டாடியபோது, சுய மரியாதைக் குடும்பங்கள், கருஞ்சட்டைக் குடும்பங்கள் ஏராளமாக வந்திருந்த நேரத்திலே, ‘‘கருஞ்சட்டைகளுக்குச் சல்யூட்’’ என்று சொன்ன மாபெரும் நன்றி உணர்ச்சி உள்ள தலைவர் நம்முடைய மு.க.ஸ்டாலின் அவர்கள்!
‘தன்மான விடுதலையும்,
தலைவர் கலைஞரும்!’
தலைவர் கலைஞரும்!’
பதவிகள் வரும் போகும். அவர் பதவியால் அளக்கப்படக்கூடியவர் அல்ல; கொள்கையால், லட்சியத்தால் அளக்கப்படக்கூடியவர். அதன் காரணமாகத்தான், இந்த வரலாற்றுப் பதிவைப் பற்றிச் சொல்லும்போது ‘தன்மான விடுதலையும், தலைவர் கலைஞரும்’ என்ற தலைப்பில் இந்த மலரிலே எழுதியிருக்கிறார்.
வெற்றி, தோல்வி எல்லாம் ஜனநாயகத்தில் சாதாரணம். இன்றைய தோல்வி, நாளைய வெற்றியாக இருக்கும்; இன்றைய வெற்றி, நாளைய தோல்வியாக முடியலாம். அது முக்கியமல்ல.
பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில்,
தளபதி மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரை!
தளபதி மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரை!
அந்தக் கட்டுரையின் கடைசிப் பகுதியில் எழுதியிருப்பதை நான் படிக்கிறேன் கேளுங்கள், ‘‘நான் செல்ல வேண்டிய பாதையைப் பெரியார் திடல் தீர்மானிக்கிறது. அறிவுப்பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஒரு கட்டுப்பாட்டுப் பணி எனக் கடமையாற்றும் ‘சுயமரியாதை இயக்கக் கண்மணி வீரமணி’ என்று தலைவர் போற்றியதைப் போலவே செயல்பட்டு வருகிறார், மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்’’ என்று எழுதியிருக்கிறார்.
மேலும் அதில், ‘‘அவசர காலத்தில் சென்னை மத்திய சிறையில் என் உயிர் காத்தவர் ஆசிரியர்; இன்றும் உணர்வூட்டி வருகிறவர்’’ என்று எழுதியிருக்கிறார். இதுதான் மிக முக்கியமானது.
அரை நூற்றாண்டு பொதுவாழ்க்கை
அனுபவம் உள்ளவர்!
அனுபவம் உள்ளவர்!
அன்றைக்கு அவருக்கு வயது 22; இன்றைக்கு அவர் 72-அய்த் தாண்டி இருக்கக்கூடிய அனுபவம் உள்ளவர். அரை நூற்றாண்டுப் பொதுவாழ்க்கை அனுபவம் உள்ளவர். சாதாரணம் அல்ல, இடையில் எத்தனையோ போராட்டங்களை எல்லாம் சந்தித்திருக்கிறார். அப்ப டிப்பட்டவர் ‘மிசா’வுக்கே போகவில்லை என்றால், சினிமாவில் வேண்டுமானால் ‘டூப்’ என்ற ஒன்று உண்டு; சிறையில் ‘டூப்’ எல்லாம் கிடையாது! ‘அவ ருக்குப் பதிலாக இவரை அனுப்புகிறேன்’ என்று சொல்ல முடியாது. ஒருவேளை இனிமேல் ஆட்சியில் ‘டூப்’ வந்தாலும் வரும். நான் சினிமாவிற்கு அதிகம் செல்பவன் அல்ல; அதில் எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால், (திருச்சி சிவாவை சுட்டிக்காட்டி) இவர் பெரிய ரசிகர். எனக்கு ஆதரவாளராக நம்முடைய தியாகு அவர்கள்தான் இருப்பார்.
நான் உயிரோடு இருக்கிறேன், அவர் (மு.க.ஸ்டாலின்) கையைப் பிடித்துக் காப்பாற்றியவன், மிசாவில் போனவன் இன்றைக்கு வந்திருக்கிறேனே, இதைவிடப் பெரிய சாட்சி வேண்டுமா உங்களுக்கு? எந்த இடத்தில் கைது செய்தார்களோ அந்த இடத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு முன்னால் இத்தனை தகவல்களைச் சொல்லுகிறோம் என்றால், நீங்கள் சும்மா இந்த ‘ஜென் சி’யையெல்லாம் வைத்துக்கொண்டு ஆடாதீர்கள். வரலாற்றைச் சொல்கிறோம்.
“இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை!’’
பிஜேபிக்கும், உங்களுக்கும் அதிகத் தொடர்பு இருந்தாலும் கூட ஒரு வேறுபாடு இருக்கிறது. இந்த புளுகு மூட்டைகள் இருக்கிறார்களே, கோயபல்சின் குருநாதர்களுக்குச் சொல்கிறோம். பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். எல்லாம் புராணத்தை வரலாறாக்குகிறார்கள். ஆனால், இப்போது வந்திருக்கும் புதியவர்கள், ‘மாற்றம், மாற்றம்’ என்று சொல்லி, நாட்டிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் ஒரு புதுமையைச் செய்திருக்கிறார்கள்; வர லாற்றையே புராணமாக்குகிறார்கள்! புராணத்தை வரலாறாக்குவது பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் வேலை. ஆனால், இங்கே வரலாற்றையே புராணமாக்குகிறார்கள். “இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை” என்று பழமொழி உண்டு. இது சேகர்பாபு அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஏனென்றால், அவர் மிகப்பெரிய பக்தர்.
‘ஷா கமிஷன்’ அறிக்கை
விசாரணைக் கமிஷன் அறிக்கை என்ற புத்தகத்தையே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். நெருக்கடி காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால், இதோ… ‘ஷா கமிஷன்’ அறிக்கை. அகில இந்தியாவிலே நெருக்கடி காலத்தில் என்ன நடந்தது என்று சொல்லும் புத்தகத்தை, வடக்கே, அன்றைய காங்கிரஸ் அரசு நூலகங்களுக்குக் கூடப் போகக்கூடாது என்று சொல்லி அத்தனையும் எடுத்துவிட்டது. பிறகு நம்முடைய இரா.செழியன் அவர்களின் முயற்சியினாலே, இந்த ஒரே ஒரு பிரதி கிடைத்தது. அதைப் பிறகு பதிப்பித்தார்கள். அன்றைக்கே நாங்கள் வாங்கிப் பத்திரமாக வைத்திருக்கிறோம்.
எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய
அவசியமே கிடையாது!
அவசியமே கிடையாது!
ஏனென்றால் இது பெரியார் திடல், உண்மைக்கு மட்டுமே மதிப்பளிக்கும் இடம்! எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தோழர்கள், தவறாக நினைக்கக் கூடாது, மன்னிக்கவும். தேர்தலில் நின்றால் கூட, கொஞ்சம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கும்; ஆனால், எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. நீங்கள் தூக்கில் போட்டாலும்கூட நாங்கள் உண்மையைச் சொல்லிவிட்டுத்தான் போவோம்!
ஷா கமிஷன் பொதுவானது; ஆனால், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் – ‘இஸ்மாயில் கமிஷன்!’ ஜஸ்டிஸ் இஸ்மாயில், ஒரு நெருப்பு நீதிபதி, சாதாரணமானவர் அல்ல. யாரும் போய் அவரிடம் மிக எளிதாக நெருங்கிவிட முடியாது. வழக்கைப் படித்துவிட்டு, நீதிமன்றம் போகக்கூடியவர். எனக்குச் சட்டக் கல்லூரியிலே இஸ்லாமியச் சட்டத்தை சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அவர். ‘Come on my dear student’ என்று அழைப்பார்.
அக்குவேறு ஆணிவேராக சொன்ன
நீதிபதி இஸ்மாயில்!
நீதிபதி இஸ்மாயில்!
அப்படிப்பட்ட நேர்மையானவர். தலைமை நீதிபதியாகி, மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்பட்டபோது கூட, ‘‘எனக்குச் சுயமரியாதை மிக முக்கியம், வேறு மாநிலத்திற்குத் தலைமை நீதிபதியாகப் போகத் தேவையில்லை, இங்கேயே இருக்கிறேன்’’ என்று சொன்ன சுயமரியாதை உள்ள, முதுகெலும்பு உள்ள கதர்ச் சட்டை அணியக்கூடிய ஒருவர். அவரை, ‘இஸ்மாயில் அய்யங்கார்’ என்று வேடிக்கையாக அழைப்பார்கள். ஏனென்றால், அவர் வெஜிடேரியன். இந்த விசாரணை ஆணையத்தில் அவரை நியமித்தவுடன், அக்குவேறு ஆணிவேராக எடுத்து எல்லாச் செய்திகளையும் சொன்னார்.
‘‘சென்னை மத்திய சிறைச்சாலையில் 1976 பிப்ரவரி முதல் 1977 பிப்ரவரி வரையிலான கால அளவில் அரசி யல் கைதிகளைக் கொடுமைப்படுத்தியதைப் பற்றியது’’ என்று அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“அவர் கைது ஆகியிருப்பார்; ஆனால், வேறு எதற்காகவோ கைது ஆகியிருப்பார்.” என்று இப்போது சிலர் சொல்கிறார்களே, வேறு எதற்கு கைதானார்? அவ்வாறு சொல்பவர்களின் தரம் தான் கீழே போகுமே தவிர, கைதானவருக்கு அதனால் பெருமை குறையாது.
வரலாற்றை ஒருபோதும் உங்களால் திரிபுவாதம் செய்துவிட முடியாது!
நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், பேச்சுரிமை உண்டு. பதவி நாற்காலியில் உட்கார்ந்து விட்டால் எல்லோரும் தலையாட்டுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். தலையாட்டுபவர், கொஞ்ச காலத்திற்குத்தான் அது. அப்புறம் யாரும் துணைக்கு நிற்க மாட்டார்கள். பதவிகள் வரும், போகும். ஆனால் மனிதர்கள் என்பவர்கள் நன்றியால், உண்மையால் அளக்கப்பட வேண்டும். வரலாற்றை ஒருபோதும் உங்களால் திரிபுவாதம் செய்துவிட முடியாது.
நீதிபதி இஸ்மாயில் அவர்கள், ஆரம்பத்திலே, வழக்குரைஞர் ஆவதற்கு முன்னால் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கதர்ச் சட்டைவாதி; வேறு எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. அவர் தெளிவாகச் சொன்னார்: ‘‘கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கையும், அதன் மீது அரசினுடைய ஆணைக்கு…’’ என்று.
‘‘உங்களுடைய வாழ்க்கை இங்கேயே முடிந்தது’’ என்றார் சிறை அதிகாரி!
சிறையில் ஓர் அதிகாரி ஒருவர் சொல்கிறார்: ‘‘உங்க ளுடைய வாழ்க்கை இங்கேயே முடிந்தது. நீங்கள் யாரும் வெளியே போக வேண்டும் என்று நினைக்காதீர்கள்; வெளியிலே போக முடியாது” என்று! எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் யாரும் வர முடியாது; எங்கே இருக்கிறோம் என்று சொல்ல முடியாது; மிசாவில் இருக்கிறோம் என்பதே தெரியாது.
‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று பேசக்கூடியவர்களுக்கு உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், கைதாகி மூன்று நாள்கள் கழித்து, பிப்ரவரி 3 அண்ணா அவர்களுடைய நினைவு நாள்.
பெரியாருடைய குருகுலத்தில் படித்தவர்!
அதில் கலைஞருடைய சாதுரியத்தைப் பாருங்கள்; பெரியாருடைய குருகுலத்தில் படித்தவர், அவர் எப்படிச் சாமர்த்தியமாகச் செய்வார் என்பதற்கு அடையாளம். பத்திரிகைகளுக்குச் சென்சார் இருந்ததால் பெயரைப் போடக்கூடாது! சிறைச்சாலையில் யார், யார் கைதியாகி உள்ளே இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. கலைஞர் என்ன செய்தார் தெரியுமா? அதுதான் கலைஞருடைய முத்திரை! ‘முரசொலி’யில், பிப்ரவரி 3 ஆம் தேதி அண்ணா அவர்களுடைய நினைவிடத்திற்கு வர முடியாதவர்கள், மாலை போட முடியாதவர்கள் என்று எல்லாருடைய பெயரையும் போட்டார்! அந்தப் பட்டியல் இருக்கிறதா, இல்லையா என்று பாருங்கள்.
இதோ, இஸ்மாயில் ஆணைய அறிக்கையில் நிறைய செய்திகள் இருக்கின்றன.
சிட்டிபாபுவின் டைரி இருக்கிறதே, அது சாதார ணமானது அல்ல! அந்த சிட்டிபாபு, மிசா காலத்தில் தன் உயிரைக் கொடுத்து இந்த இயக்கத்தைக் காப்பாற்றிய ஒரு மாவீரன். அதேபோல சாத்தூரிலே பாலகிருஷ்ணன் அவர்கள்.
உங்களை வரலாறு மன்னிக்குமா?
இந்த இயக்கம் தாளமுத்து, நடராசன் காலத்திலிருந்து எத்தனையோ பேரை சிறைச்சாலையில் சந்தித்தி ருக்கிறது. ஆனால், இவ்வளவு கேவலமாக, கொடு மைகளைச் சந்தித்தவர்களின் உயிர்த் தியாகத்தைக் கொச்சைப்படுத்தக்கூடிய அளவிலே சொல்லுகிறீர்களே, உங்களை வரலாறு மன்னிக்குமா? தயவு செய்து எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஏனென்றால், ஸ்டாலினுக்கோ, எங்களுக்கோ அதைப் பற்றி ஒன்றும் கவலை இல்லை. நாங்கள் ‘தியாகி, தியாகி’ என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.
‘சிறையிலே இருந்தவர்கள்’ என்று ‘தியாகி’ பட்டம் போட்டுக் கொண்டதில்லை நாங்கள்!
தந்தை பெரியார் ஒரு பழமொழி சொல்வார்: ‘‘மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதனாலேயே, எலும்புத் துண்டைக் கழுத்திலே போட்டுக் கொண்டு அலைய வேண்டிய அவசியமில்லை’’ என்று. அதுமாதிரி நாங்கள் ஒன்றும் ‘சிறையிலே இருந்தவர்கள்’ என்று ‘தியாகி’ பட்டம் போட்டுக் கொண்டது இல்லை.
பின்னர் ஏன் அதைச் சொல்கிறார்கள்? இங்கே தான் கவனிக்க வேண்டும். இதில் ஒவ்வொரு இடமும் விரிவாக இருக்கிறது. தற்போது நேரம் இல்லாததினால் நான் படிக்கவில்லை.
எங்களிடமிருந்துதான் அடிப்பதற்கு ஆரம்பித்தார்கள்!
அடித்தார்கள், அடித்து உள்ளே தள்ளினார்கள். இதில் ‘விடுதலை’ மேலாளரின் முதுகுத்தண்டு வடம் பாதித்தது. அவரைத் தூக்கி அடிப்பதற்கு வருகிறார்கள். முதலில் வரிசையாக இருந்த எங்களிடமிருந்துதான் அடிப்பதற்கு ஆரம்பித்தார்கள். திராவிடர் கழகத்தில் 11 பேர். ஒவ்வொரு ‘செல்’லாக வரும்போது, ஆரம்பம் எங்களிடம் தான்.
நாங்கள் நினைக்கவே இல்லை. ஏனென்றால், 6 மணிக்கே எங்களை சிறைக்குள் உணவு கொடுத்து உள்ளே தள்ளினால், உணவுக்கு மட்டும்தான் கதவைத் திறப்பார்கள். திறந்து உள்ளே போட்டால், அப்புறம் சட்டப்படி பொழுது விடிந்தால்தான் திறக்க வேண்டும். ஆனால், இரவு 9 மணிக்கு வந்து, ‘உங்கள் அறையை சர்ச் செய்ய வேண்டும்’ என்பார்கள். ‘நாம் என்ன வைத்திருக்கிறோம்? எனவே சர்ச் பண்ணட்டும்’ என்று சொன்னால், ‘வரிசையாக உட்காருங்கள்’ என்பார்கள்.
எங்கள் வீட்டுப் பெண்மணிகளை இழிவுபடுத்தக்கூடிய வார்த்தைகள்!
ஆனால், ‘உட்காருங்கள்’ என்றெல்லாம் வார்த்தையே கிடையாது; ‘உட்காருங்கடா’ என்று அசிங்கமான வார்த்தைகள்! வாழ்நாளில் எங்கள் நண்பர்கள் மத்தியிலோ, எதிரிகள் மத்தியிலோ கூடக் கேட்டிராத கொச்சையான வார்த்தைகள்! எங்கள் வீட்டுப் பெண்மணிகளை இழிவுபடுத்தக்கூடிய வார்த்தைகள்! அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டோம்.
வரிசையாக வந்து அடித்தார்கள். நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை. யார், யார் எந்தெந்த அறையில் இருந்தார்கள் என்பதற்கு இங்கே மிகப்பெரிய அளவில் குறிப்புகள் இருக்கின்றன. யார், யார் இருந்தார்கள் என்று பெயர்களில் ஒருமுறை அல்ல, பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றை யாராலும்
சுலபமாக அழித்துவிட முடியாது!
சுலபமாக அழித்துவிட முடியாது!
ஆனால், ‘இஸ்மாயில் என்றொருவரே இல்லை’ என்று சொல்லிவிட்டால், என்ன செய்வது? ‘ஸ்டாலின் என்றே ஒருவர் இல்லை’ என்று ஒருவர் சொன்னால், அப்படிச் சொல்லுகிறவரைப் பற்றி இழிவாக நினைப்பார்களே தவிர, சொல்லுகிறவரைப்பற்றி ‘புளுகுணி’ என்று இழிவாக நினைப்பார்களே தவிர, அதற்காக ஸ்டாலினோ, வீரமணியோ ஒவ்வொருவரின் வீட்டின் கதவைத் தட்டி, ‘நாங்கள் சிறைக்குப் போய் வந்தோம்’ என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! வரலாறு அதைச் சொல்லும்! அந்த வரலாற்றை யாராலும் சுலபமாக அழித்துவிட முடியாது!
இஸ்மாயில் விசாரணை ஆணைய அறிக்கையில் 50 ஆவது பக்கத்தில்…
எடுத்துக்காட்டுக்காகச் சொல்கிறேன்… இஸ்மாயில் விசாரணை ஆணைய அறிக்கையில் 50 ஆவது பக்கத்தில், ‘1976 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 4 ஆம் நாளிட்ட கடிதத்தை அரசுத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியதின் கண்காணிப்பாளர் நடத்தை குறித்ததாகும்’ என்று சொல்கிறார். இதெல்லாம் சாதாரணமல்ல, அரசாங்கத்தின் மிகப்பெரிய ஆவணங்கள்.
‘ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசிகள்!’
இப்போது, ‘‘அரசியல் கைதியாகப் போகவில்லை’’ என்கிறார்கள். இன்னும் சில புத்திசாலிகள் இருக்கிறார்கள், ‘ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசிகளாக’ அங்கே புதிதாக போயிருக்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றும் நிலைத்ததே இல்லை.
அந்தக் கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
“அரசியல் கைதியாக சிறையில் இருந்த தன் மகன் M.K.ஸ்டாலினை திரு. மு. கருணாநிதி 1976 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 3 ஆம் நாள் அன்று 12.40-க்கு”, மணி உள்பட, தேதி உள்பட இவ்வளவும் பதிவாகி இருக்கிறது.
பெரியாரின் நெஞ்சுரம், அண்ணாவின் கனிவு!
கலைஞர் என்றால், அசையாத அஞ்சாநெஞ்சன்! காரணம், ஈரோட்டுப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்! பெரியாரின் நெஞ்சுரம், அண்ணாவின் கனிவு, அவருக்கு இயல்பானது. அதனால் மிகத் தெளிவாக அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு இங்கே கேட்கிறார்.
அப்போதுதான் எங்களுக்கு நேர்காணல். குடும்ப விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கையில், சிறைச்சாலையில் தி.மு.க.வைச் சேர்ந்த அரசியல் கைதியாக உள்ள தன் மகனிடம் கேட்டார். ‘‘அரசியல் கைதிகள் சிறைச்சாலைக்குள் அடிக்கப்படுகிறார்கள் என்று வதந்தி நிலவுகிறதே’’ என்று கேட்டார்.
அங்கே எப்படி பதில் சொல்ல முடியும்? ஏனென்றால் அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாது. அப்படிப்பட்ட ஒரு கொடுமையான சூழ்நிலையிலே இருக்க முடியுமா?
‘எல்லாம் நன்றாக இருக்கிறது’. அனைவரும் வீட்டில் அப்படித்தானே சொல்வோம்.
ஒரு பக்கத்தில் என் துணைவியார் அல்லது என்னைப் பார்க்க அனுமதிக்கப்பட்டவர்கள் வந்தார்கள் என்றால், நடுவில் ஜெயிலர் – அடுத்து ஒரு திரை. திரைக்குப் பின்னால் இரண்டு அதிகாரிகள். ஒருவர் மாநில உளவுத்துறை, இன்னொருவர் ஒன்றிய உளவுத்துறை. இவ்வளவும் வைத்துக்கொண்டுதான் அங்கே பேசுவார்கள்.
அப்போது உங்கள் மனைவியிடம் என்ன பேச முடியும்? குடும்பத்தைப் பற்றி என்ன பேச முடியும்? வேறொன்றும் பேச முடியாது.
‘நன்றாக இருக்கிறீர்களா?’,
‘மிகவும் நன்றாக இருக்கிறோம்’, அடியை வாங்கிக் கொண்டு!
ஏனென்றால் அங்கே வேறு பேச முடியாது. நாங்கள் எப்போது போகப் போகிறோம் என்று தெரியாது, மனித இயல்புதானே!
ஒரு பக்கம் அடித்தார்கள், பக்கத்து அறையிலேதான் சிட்டிபாபு அவர்கள் இருந்தார்கள். அவருடைய டைரியிலே மற்றவையெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்தனையும் சொல்வதற்கு நேரமில்லை.
இன்னமும் நாங்கள் உயிரோடு இருக்கிறோம்! இஸ்மாயில் கமிஷன் ஆதாரப்பூர்வமாக இருக்கிறது!
‘உண்மை’யை என்றைக்கும் நீங்கள் களப்பலியாக்கிவிட முடியாது!’ இன்னமும் நாங்கள் உயிரோடு இருக்கிறோம்! இஸ்மாயில் கமிஷன் ஆதாரப்பூர்வமாக இருக்கிறது. 94 நெருங்கப்போகிற இந்த வயதில் கூட,நினைவாற்றல் தவறாமல் இருக்கிறோம்! எங்களுடைய நினைவாற்றலுக்கு நாங்களே நன்றி செலுத்திக் கொள்ள வேண்டும்! யாரும் எங்களுடைய முதுகைத் தட்டுகிறார்களோ, இல்லையோ! எங்கள் முதுகை நாங்களே தட்டிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
இன்னும் ஆயிரம் மிசாக்களை இந்தத் திராவிட இயக்கம் பெற்றாலும், நெருப்பாற்றில் நீந்தினாலும், இந்த இயக்கம் வளரும்!
எஃகுக் கோட்டையான கொள்கைக் கோட்டையை ஒருபோதும் உங்களால் அசைக்க முடியாது!
எனவே, ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதர் என்று பெயர்! திராவிட இயக்கம் என்றால் எஃகுக் கோட்டை என்று அர்த்தம்! செயின்ட் ஜார்ஜ் கோட்டை வேண்டுமானால் மற்றவர்களுக்குப் போய் சேர்ந்திருக்கலாம்; எஃகுக் கோட்டையான கொள்கைக் கோட்டையை ஒருபோதும் உங்களால் அசைக்க முடியாது! அசைக்க முயற்சித்தால் நீங்கள் அதிலேயே சிக்கிக் கொள்வீர்கள்; உங்களைக் காப்பாற்றுவதற்கு ஆள் தேவைப்படும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
