மத்தூர் ஒன்றியத்தில் தந்தை பெரியார் 148 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கழகக் குடும்ப விழா – விருந்து

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மத்தூர், செப். 26- கிருட் டினகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் உலக மனிதநேய மாண் பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினையொட்டி சுயமரியாதை இயக்க கழகக் குடும்பங்கள் சந்திப்பு “குடும்ப விழா” விருந்து நிகழ்ச்சி 20/09/2026 அன்று காலை 9.00 மணிக்கு களர்பதி சமுதாய கூடத்தில் மிகுந்த எழுச்சியுடன் டிஜிட்டல் பதாகை (பேனர்கள்) விளம்பரம் மத்தூர் பேருந்து நிலையம், மண்டபம் அருகி லும் வைக்கப்பட்டது, கழகக் கொடிகள் கட்டப்பட்டு சிறப் பான விளம்பர ஏற்பாடுகளுடன் குடும்ப விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வினை திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், பகுத் தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் கழகக் குடும்பங்கள் சந்திப்பு (குடும்ப விருந்து) மதியம் பிரியாணி விருந்து சிறப்பானவகையில் ஏற்பாடுகளை செய்து வழங்கினர். இந்த நிகழ்விற்கு மத்தூர் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் வே.திருமாறன் தலைமை வகித்தார்.

நிகழ்விற்கு மாநில மகளிரணி துணைச் செயலாளர் மு. இந்திரா காந்தி, பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மாவட்ட தொழிலாளரணித் தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா.சிலம்பரசன், மாவட்ட மகளிரணித் தலைவர் முருகம்மாள், மகளிர் பாசறை மாவட்டத் தலைவர் மா.சிவசக்தி ஆகியோர் முன்னிலையில் கழகக் குடும்பங்களின் மகளிரணி, மாணவர் கழகம், இளைஞரணி, பெரியார் பிஞ்சுகள் ஆகியோருக் கான பல்வேறு போட்டிகள் நடந்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன. அதன் விவரம் கீழ்கண்டவாறு:

1) இசை நாற்காலி, 2) பிரமிடு கப்பு பலூன் ஊதி அடுக்குதல், 3) பலூன் ஊதி வெடித்தல், 4) ஸ்ட்ரா மற்றும் கப் 5) வடை சாப்பிடும் கேம், 6) நடனம், 7) ஸ்பின் மற்றும் டை, 8) பேபர் மேல் அசையாமல் நிற்பது. 9) ஸ்ட்ராலிங்கின், 10)கேனில் தண்ணீர் நிரப்புதல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டி களை திராவிட மாணவர் கழகம் மாநில துணைச் செயலாளர் ச.மணிமொழி, மாணவர் கழக ஜெ.குமிலி ஆகிய இருவரும் ஒருங்கிணைத்து போட்டிகளை சிறப்பாக நடத்தினர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு அழைப் பாளர்களாக திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திரா விடமணி, மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கி பாராட்டுகளை தெரி வித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட கழகச் செயலாளர் பெ.கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே.சி.எ.சிற்றரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்துக் கொண்டனர்.

மத்தூர் ஒன்றியத்திலுள்ள கழகக் குடும்பகளின் குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி களர்பதி சமுதாயக் கூடத்தில் காலை 9.00 முதல் தொடங்கி மாலை 4.00 மணிவரை மிகுந்த எழுச்சியோடு சிறப்பாக நடைபெற்ற குடும்ப விழாவில் ஒன்றுகூடி ஒருவருக்குகொருவர் மகிழ்வுகளை பகிர்ந்து கொண்டு சிறப்பாக குடும்ப விழாவினை எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று “நீட்” தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழு மையாக ரத்து செய்யக்கோரி நடைபெற்ற இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்ற கிருட்டினகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பங்கேற்ற களப்பணி தோழர்களுக்கு சால்வை (பயனாடை) போர்த்தி பாராட்டுளும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

குடும்ப விழா சிறப்பாக நடைபெற பணியாற்றியத் தோழர்கள் வ.ஆறுமுகம், கி.முருகேசன், சி.வெங்கடாசலம், சா.தனஞ்செயன் மற்றும் குடும்ப விழா நிகழ்ச்சியை சிறப்பான வகையில் ஒளிப்படம் எடுத்து பதிவு செய்து ஆவணப் படுத்தியுள்ள புகைப்பட கலைஞர் நா. சிலம்பரசன் உள்பட நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *