சேலம், செப்.26 சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை நடை பெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசியதாவது:
உமாநிலங்களின் சமத்துவத் துக்கான கூட்டாட்சிக் கோட் பாடு மறுக்கப் படுவதால் ஏற்பட் டுள்ள சமநிலையின்மை, அனைத்து மாநிலங் களிலும் நம்பிக்கையின்மையையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை இதுவரை எந்தக் கட்சியும் பெற்றதில்லை. 1984-இல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக 48 சதவீத வாக்குகள் கிடைத்த போதும், 77 சதவீத இடங்களின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தியமைக்கும் அளவிற்கான பெரும்பான்மை அவர்களுக்கு எளிதாக கிடைத்தது என்று தெரிவித்தார்.
மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளு மன்றத் தொகுதிகளை அதிகரிப்பது ஜனநாயகத்தில் சமநிலையின்மையை ஏற்படுத்தும். ஜம்முவில் தொகுதி வரையறையில் காணப்படும் வாக்காளர் எண்ணிக்கைப் வேறுபாடு போன்ற நிலை, ‘ஜெர்ரிமேண்டரிங்’ எனப்படும் தேர்தல் ஆதாயத்துக்காக தொகுதி எல்லைகளை மாற்றும் நடைமுறைக்கு வழிவகுக்கக்கூடும்.
மக்களவையில் மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவம் இருப்பதுடன், சிறிய மாநிலங்களுக்கும் வலுவான குரல் கிடைக்க வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்துக் கும் சென்ட்டில் தலா 2 உறுப்பினர்கள் உள்ளனர்.
அதேபோல், இந்திய மாநிலங்கள வையிலும் அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையிலான பிரதி நிதித்துவம் வழங்க வேண்டும் என சர்க்காரியா கமிஷன், மிஸ்ரா கமிஷன், ராஜமன்னார் குழு, புஞ்சி கமிஷன் ஆகியவை பரிந்துரைத்துள்ளன. மாநிலங்களவையை உண்மையான ‘மாநிலங்களின் அவை’யாக மாற்ற இதுவே வழி, என்றார்.
