ஒப்பந்த முறையில் மின் கணக்கீட்டாளர்கள் நியமனமா? தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப்.26- ஒப்பந்த முறையில் மின் கணக்கீட்டாளர்களை நியமிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2.6 கோடிக்கும் மேல் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளில் மின்சார பயன்பாடு 60 நாட்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.

மின் வாரியத்தின் மின்கணக்கீட்டாளர் ஒவ்வொரு இணைப்புக்கும் கணக்கீட்டுக்கான செயலி மூலம் கணக்கீடு செய்து நுகர்வோரின் கணக்கீட்டு அட்டையில் பயன்பாடு மற்றும் கட்டணத் தொகையை பதிவு செய்வார், செயலி மூலம் பதிவு செய்யப்பட்ட தரவுகள் தானாக மின் வாரியத்தின் தரவுத்தளத்தில் சேமிக்கப்படும்.

செயலி இல்லாத போது கணக்கீட்டாளரே நேரடியாக கணக்கீட்டு தரவுத்தளத்தில் பதிவு செய்வார். இதனிடையே மின் வாரியத்தில் போதிய அளவில் மின்கணக்கீட்டாளர்கள் இல்லை என்றும் 5 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பதவி உயர்வு பெற்ற கணக்கீட்டுப் ஆய்வாளர்கள், கணக்கீட்டு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர். குறைவாக பணியாளர்கள் இருப்பதால் கணக்கீட்டில் தாமதம் ஏற்படுகிறது, இதனால் நுகர்வோருக்கு மின் கட்டணமும் அதிகரிக்கிறது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த முறையில் மின் கணக்கீட்டாளர்கள் நியமிக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அனைத்து மேற்பார்வை பொறியாளர் களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், அடுத்த 6 மாதங்களுக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த முறையில் தற்காலிகமாக கணக்கீட்டாளர்களை நியமிக்கவும், எவ்வளவு பணியாளர்கள் தேவை என்பதை பகுதி வாரியாக ஆராய்ந்து, மேற்பார்வை பொறியாளர்களின் ஒப்புதலுக்கு பின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப் பட்டுள்ளது.

இதனிடையே இந்த நடவடிக்கைக்கு தொழிற் சங்கத்தினர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் கண்ணன் கூறுகையில், “மின் கணக்கீட்டாளர்களை ஒப்பந்த முறையில் நியமிப்பது சட்டவிரோதமானது. இதை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளோம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *