பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்கக்கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சிறையில் அடைப்பேன் என்று மிரட்டுவதா? அமைச்சர் செங்கோட்டையனுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

1 Min Read

ஈரோடு, ஜூன் 15 தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன், அவர் மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

வண்டல் மண்

“கடந்த அதிமுக ஆட்சி காலத் தில் அமைச்சராக இருந்தபோது, பவானிசாகர் அணையில் விவசாயி களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதியளித்ததில், பல கோடி ரூபாய் வருமானம் பார்த்தவர் தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்.”

மிரட்டல்

பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுப்பதில் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பியிருந்தோம். ஆனால், வண்டல் மண் எடுக்க இனி போரா டினால் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுவேன் என அமைச்சர் செங்கோட்டையன் மிரட்டுகிறார்.

இத்தகைய செயல்பாடுகளின் மூலம் அவர் தற்போதைய தவெக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார். செங்கோட்டையன் போன்ற அமைச்சர்களை வைத்துக் கொண்டு தூய்மையான ஆட்சியை நடத்துவது என்பது சாத்தியம் இல்லாத காரியம் என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.  இவ்வளவு நாட்களாக விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு அதிகாரிகள் இடையூறு செய்ததற்கான பின்னணி காரணம் யார் என்பது தற்போது தெரிந்துவிட்டது. குறிப்பாக, விவசாயிகளை அவதூறாக பேசிய தோடு, அவர்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பது அமைச்சர் செங் கோட்டையனின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.

எனவே, விவசாயிகள் மீது அவதூறு பரப்பி, சிறையிலடைப் பதாக மிரட்டல் விடுத்த அமைச்சர் செங்கோட்டையன் மீது முதலமைச்சர் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *