அந்த வல்லமை படைத்த நபர்தான் இந்த சீமா கண்ணாவா?

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அரியானா தேர்தலில் நடந்த வாக்காளர் நீக்க முறைகேடு தொடர்பாக ராகுல் காந்தி பேட்டியளித்த போது “சிலரின் வாக்காளர் பதிவுகளைப் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர். அதாவது அதிகாலை 4 மணிக்கு எழுந்து புகார்களைப் பெற்று பட்டியலில் உள்ள பெயர்கள் நீக்கப்படுகின்றன” என்றார்.

“ஒருவர் அதிகாலை 4:07 மணிக்கு எழுந்து, வெறும் 36 விநாடிகள் இடைவெளியில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பெயர்களை நீக்கச் சொல்லிவிட்டு மீண்டும் தூங்கச் செல்கிறார்” என்று நையாண்டியாகவும், அடுக்கடுக்கான ஆதாரங்களுடனும் குறிப்பிட்டார்.

உண்மையில் அந்த வாக்காளர் அப்படிச் செய்யவில்லை. அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, டில்லியில் இருந்த தனிநபர் ஒருவர்  மூலமாக இந்த நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை அவர் நிரூபித்தார்.

தேர்தல் ஆணையத்தின் இணையப் பிரிவுத் தலைவர் சீமா கண்ணாவுக்கு, கோவா கோட்டாட்சியர் அனுப்பிய  97 பேர்கள் மீதான பட்டியலைச் சேருங்கள். இவர்கள் எல்லாம் சரியான நபர்கள், நேரில் சென்று ஆய்வு செய்தோம்” என்று சான்றுகளோடுப் பட்டியல் அனுப்பிய போதும், அதனை உள்ளீடு செய்ய முடியாத அளவுக்கு உள் நுழையும் பக்கத்தை முடக்கம் செய்தார். இதை அந்த அதிகாரியே பல முறை மின்னஞ்சல் அனுப்பி உறுதி செய்துள்ளார்.

இறுதியில் வாக்காளர் பட்டியல் முழுமையாக வெளிவந்த பிறகு இந்த 97 பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

இது ஒரே தாலுக்காவில் நடந்தது. கோவா யூனியன் பிரதேசத்தின் விதிமுறைகளின் படி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே மருத்துவக் காப்பீடு, இதர அரசு தரும் சலுகைகள் உண்டு.

காரணம் கோவா போர்த்துகீஸியர்களின் ஆட்சியில் இருந்து விடுபட்டதால் நிறைய பேர் போர்ச்சுகல் குடியுரிமை பெற்றுள்ளனர். ஆகையால் அரசுச் சலுகைகள் சரியான நபர்களைச் சென்றடைய இந்த விதிமுறையை உருவாக்கினார்கள்.

இந்த நிலையில் சீமா கண்ணாவின் நடவடிக்கையால் 97 பேர்களின் வாக்காளர் உரிமை பறிபோனது.  வாக்காளர் பட்டியலில் இருந்து இந்த 97 பேர் நீக்கமும் ஒரே ஒரு தாலுக்காவில் மட்டும் தான்.

இதே போன்றுதானே மேற்குவங்கம், தமிழ்நாடு, பீகார் மற்றும் அரியானா, டில்லியில் நடந்திருக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *