சென்னை, ஜூன் 24- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கொள்கை உறவுகளின் “குடும்ப விழா” 21.6.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் – வனிதா ஆகியோரின் மகன் மருத்துவர் கா.வ.காரல்மார்க்சுக்கு பாராட்டு விழா ஆவடி மாவட்ட கழகக் காப்பாளர் பா.தென்னரசு தலைமையில் நகர கழகச் செயலாளர் இ.தமிழ்மணி வரவேற்புரையுடன் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
நிகழ்வில் திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சு.குமாரதேவன், தே.செ.கோபால், சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்ரன், மாநில மகளிர் பாசறைச் செயலாளர் பா.மணியம்மை, தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் வில்வநாதன், தென்சென்னை மேற்கு மாவட்ட கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, தாம்பரம் மாவட்ட கழகச் செயலாளர் கோ.நாத்திகன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ், ஆவடி மாவட்ட உண்மை வாசகர் வட்டச் செயலாளர் கி.மு.திராவிட மணி, ஆவடி மாவட்ட கழகத் துணைத் தலைவர் மு.இரகுபதி, அம்பத்தூர் பகுதி கழகத் தலைவர் பூ.இரா.இராமலிங்கம், திருமுல்லைவாயல் பகுதி கழகத் தலைவர் இரணியன், பட்டாபிராம் பகுதி கழகத் தலைவர் இரா.வேல்முருகன், பூவிருந்தவல்லி பகுதி கழகச் செயலாளர் தி.மணி மாறன், பாடி பகுதி கழகச் செயலா ளர் எ.கண்ணன், மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், வனிதா ஆகியோர் உரையாற்றிய பின் மருத்துவர் கா.வ.காரல்மார்க்ஸ் ஏற்புரையாற்றினார்.
இறுதியாக மாவட்டச் கழக செயலாளர் க.இளவரசன் நன்றி கூறினார். நிகழ்வில் ஆவடி மாவட் டத்தை சார்ந்த கழக கொள்கை உறவுகள் குடும்பத்தோடு திரளாக பங்கேற்றனர்.
மேலும் சென்னை மண்டல கழக தோழர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஆவடி மாவட்ட கழக கொள்கை குடும்ப உறவுகள் சார்பாக பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, ஆவடி மாவட்ட கழகத் துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.கார்த்திக்கேயன், மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் சு.வெங்கடேசன், நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி, திடல் வை.கலையரசன் ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்தனர்.
