உடனே பதவி விலக வேண்டும்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324, தேர்தல் ஆணையத்தைச் சுயேச்சையான, கூட்டுப் பொறுப்புள்ள அமைப்பாகவே வரையறுக்கிறது. சட்டப்படி மூன்று ஆணையர்களுக்கும் சமமான அதிகாரங்களே உள்ளன; கருத்து வேறுபாடுகள் எழுந்தால் அவை பெரும்பான்மை முடிவின் மூலமே தீர்க்கப்பட வேண்டும்.ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்த விதியைப் பின்பற்றாமல், சக ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும்விவேக் ஜோஷி ஆகியோரின் எதிர்ப் பையும் மீறித் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளார்.
இரு ஆணையர்களும் எழுப்பியுள்ள கேள்விகள் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பானவை மட்டுமல்ல; அவைநிறுவன நேர்மை, ஜனநாயகச் செயல் பாடு, வெளிப்படைத்தன்மை, அதிகாரக் குவிப்பு மற்றும் வாக்குரிமைப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ள டக்கியவை. இதனால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த 10 மாதங்களில், புதிய வாக்காளர் களைச் சேர்க்கும் ‘படிவம் 6’-ல் விதிகளைப் பின்பற்றாமல் மாற்றங்கள் செய்தது, தரவுத் தளத்தைக்கட்டுப்படுத்தும் அய்டி-பிரிவில் பணிப்பகிர்வு செய்தது என 14 முதன்மையான விவகாரங்களில்பாஜக நிலைப்பாட்டிற்குச் சாதகமாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இரு ஆணையர்களின் கடுமையானஎதிர்ப்பையும் மீறி இம்மாற்றங்கள் செய்யப்பட்டதால், அவர்கள் நாட்டின் கேபினட்செயலாளருக்கே கடிதம் எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மாநில தேர்தல் அதிகாரிகளின் கட்டுப் பாட்டிலிருந்த வாக்காளர் தரவுத்தளம், டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தின் மத்தியக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கோவா போன்ற மாநிலங்களில்தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் மென்பொருள் மூலமாகத் தானா கவே நீக்கப்பட்ட சம்பவங்கள், தரவுத் தளத்தைக் கொண்டு வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் முறைகேட்டுச் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.
தேர்வுக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமரும் ஒன்றிய அமைச்சரும் கொண்ட தங்களுக்குச் சாதகமான பெரும்பான்மை முறையை உருவாக்கி உள்நோக்கோடுதான் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டார். இவர் ஒன்றிய உள்துறைஅமைச்சகத்தில் அமித் ஷாவுக்குக் கீழ் செயல்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்தியவர். 2019-இல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370-அய் ரத்து செய்ததில் முக்கியப் பங்காற்றியவர். ‘சிறீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளை உருவாக்கத்தில் சிறப்புப் பிரிவுத் தலைவராகவும் இருந்தவர். இதன்மூலம், அரசியல் சாசனத்தை மீறிசங்பரிவாரின் ஏவலாளியாக செயல்பட்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ்-பாஜக சித்தாந்த நிகழ்ச்சிநிரலை அமல்படுத்த, தரவுத்தளத்தையும் தேர்தல் முறையையும் ஞானேஷ் குமார் மூலம் ஒன்றியஅரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பது அம்பலமாகியுள்ளது. எனவே எஸ்அய்ஆர் செயல்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்;ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
நன்றி:
‘தீக்கதிர்’, தலையங்கம் 25.9.2026
