
* பெரியார் பெருந்தொண்டர் முத்துக்கிருஷ்ணன் ‘பெரியார் உலகம்’ நன்கொடை – ரூ.30,000, ‘விடுதலை’ சந்தா – ரூ.2,000, ‘சாமி கைவல்யம் முதியோர் இல்லம்’ – ரூ.2,000, ‘அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லம்’ – ரூ.2000 என மொத்தம் ரூ.36,000 நன்கொடையைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். தமிழர் தலைவர் அவர்கள் முத்து கிருஷ்ணனுக்குப் பயனாடை அணிவித்தார். உடன்: மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், ஆவடி மாவட்டக் கழகச் செயலாளர் க.இளவரசன்.* வட சென்னை மாவட்ட கழக அமைப்பாளர் ஓட்டேரி சி.பாசுகர் – தாட்சாயணி இணையரின் மகள் இளையமதி – சதீஷ் ஆகியோரது மணவிழா சில நாட்களுக்கு முன் நடந்தது. மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.15,000 வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். உடன்: மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன். (17.9.2026 – பெரவள்ளூர் – பெரம்பூர்)
