கேம்பிரிட்ஜில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

கேம்பிரிட்ஜ் பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக பெரியார் தோழர்கள் 20.9.2026 அன்று குடும்பமாக  ஒன்று கூடி  கறி விருந்து ஏற்பாடு செய்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

பெரியார் பிஞ்சுகள் புத்தன் மற்றும் அகரன் ஆகியோர் கேக் வெட்டினர்.  தோழர் முனைவர் கிருபா முனுசாமி மற்றும் தோழர் மருத்துவர் அனிச்சம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தோழர்கள் பிரின்சஸ் சமதர்மம்,  தோழர் கிருபாஷங்கர், தோழர் சினேகா,  மற்றும் தோழர் ஹரிஷ் கமுகுடி மாரிமுத்து  ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் பிறந்தநாள் விழாவை ஒட்டி,  தந்தை பெரியார் பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில், சிறப்பு இனிப்புப் பொட்டலங்கள் நண்பர்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டனர்.

தந்தை பெரியார் சமூகநீதி நாள் விழா  நிறைவாக ‘கடவுள் இல்லை – கடவுள் இல்லை’ எனும் கொள்கை முழக்கமும், தமிழ்நாடு அரசின் சமூகநீதி நாள் உறுதி மொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *