
டல்லாஸ், டெக்சாஸ், செப்.24 தந்தை பெரியாரின் 148-ஆம் பிறந்தநாள் விழா அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணம் டல்லாஸ் நகரில் மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.
பெரியார் இன்டர்நேஷனல் அமைப்பு, என்.ஆர்.டிஅய்.ஏ. (NRTIA) மற்றும் திமுக வெளிநாடுவாழ் இந்தியர் அணி (DMK NRI South Wing) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து இந்த விழாவை முன்னின்று ஏற்பாடு செய்து பங்கேற்றனர். சமூக நீதி மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும் வகையில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
விழாவில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள்
பெரியார் நினைவு ‘5k ஓட்டம்’: சமூக நீதி விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த ஓட்டத்தில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஓடினர்.
இளம் தலைமுறைக்கான பேச்சுப்போட்டி: சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்காக “ஏஅய் யுகத்தில் பெரி யாரின் பங்களிப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டி அனைவரையும் கவர்ந்தது.
சமூக நீதி நாள் உறுதிமொழி: விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சமத்துவம் மற்றும் சமூக நீதியைக் காப்போம் எனத் தங்களின் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
சிறப்பு கருத்தரங்குகள்
‘‘பெண்களின் காவலர் பெரியார்’’
‘‘பெரியாரும் சமூக நீதியும்’’
‘‘சோசியல் சயன்டிஸ்ட்’’ பெரியார்
‘‘வீடுகளில் பெரியாரிசம்’’
போன்ற பல்வேறு ஆழமான தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் உரையாடல்களும் விவாதங்களும் நடைபெற்றன.
பெரியாரின் சிந்தனைகளை உலகளாவிய தமிழர் களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அமைந்த இந்த டல்லாஸ் கொண்டாட்டம், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரியார் கொள்கைகளின் தாக் கத்தை மீண்டும் ஒருமுறை ஆழமாகப் பதித்துள்ளது.
