திருவாரூர், ஜூலை 20- பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம் நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு:
திருவாரூர்
பகுத்தறிவாளர் கழக திருவாரூர் மாவட்டம் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி எழுதிய ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா கருத்தரங்கு நடைபெற்றது.
பகுத்தறிவாளர்கழக திருவாரூர் மாவட்ட தலைவர் அரங்க ஈவேரா தலைமையில் திருவாரூர் ரோட்டரி மகாலில் திராவிடர் கழக திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ் எஸ் எம் கே அருண் காந்தி திராவிடர் கழக திருவாரூர் மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ. உமாநாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னதாக க.தமிழ் நேயன் அனைவரையும் வரவேற்று நூலின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்து வருவாய் துறையில் ஓய்வு பெற்ற க.அசோக் ராஜ் மின்வாரியத்துறை (ஓய்வு) எஸ். கரிகாலன் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களுக்கு பதிலடி கொடுக்க ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நூல்கள் சிறந்த ஆயுதமாக உள்ளது எனவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தனது உரையில் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நாகராஜன் திராவிடர் கழக திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண் காந்தி ஆகியோர் நூலின் முக்கியத்துவம் குறித்தும் பகுத்தறிவாளர் கழக திருவாரூர் மாவட்ட தலைவர் அரங்க ஈவேரா தலைமை உரையும் ஆற்றினார்.
கழகச் சொற்பொழிவாளர் கோ. செந்தமிழ் செல்வி “மதவாதிகளாலும் ஆணாதிக்க சிந்தனைகளாலும் பெண்கள் தொடர்ந்து புறந்தள்ள பட்டு இருப்பதை திராவிடர் கழகம் மட்டுமே சுயமரியாதை இயக்கம் முதல் நூற்றாண்டு காலமாக எதிர்த்து பெண்களும் சிந்திக்க வேண்டும் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும்” என போராடி வந்ததை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா ஜெயக்குமார் திருவாரூர் மாவட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் தொடர் பிரச்சாரங்கள் நடந்து வருவதை சுட்டிக்காட்டி நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திட்ட வங்கைமான் சதீஷ்குமார் நன்னிலம் நிலவழகன், திருவாரூர் சமரன் உள்ளிட்ட இயக்க தோழர்களுக்கு பாராட்டு தெரிவித்து பொறுப்பாளர்களுக்கு பயனாடை அணிவித்து தொடக்க உரையாற்றினார்.
பேராசிரியர் எழிலரசன் “ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூலினை அறிமுகம் செய்து தற்போது அறிமுகம் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி சமூக நீதிக்காக தொடர்ந்து நூல்களை எழுதுவதும் வலியுறுத்துவதும் திராவிடர் கழகம் எப்போதும் முன்னிலையில் இருக்கும் எனவும் நூலினை பெற்றுக் கொண்ட அனைவரும் தாங்கள் படித்துவிட்டு அதனை பிறருக்கும் அதில் உள்ள கருத்துகளை பரப்புமாறு கேட்டுக் கொண்டு நூல் அறிமுக உரை ஆற்றினார்.
நிகழ்வின் இறுதியில் சுகாதாரத்துறை இரா கார்த்திகேயன் நூல் அறிமுக விழா கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நடைபெற்ற நூல் அறிமுக கருத்தரங்கு விழாவினை திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர் கோ.பிளாட்டோ ஒருங்கிணைத்தார்.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய புத்தக அறிமுக விழாவில் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்.என்னும் டிரோஜன் குதிரை நூலினைப் பெற்ற தோழர்கள்.
பொத்தனூர்

19.07.2026 அன்று மாலை 4.00 க்கு நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பெரியார் மன்றத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ப.க மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ப.க மாவட்ட செயலாளர் மருத. அறிவாயுதம் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட காப்பாளர் அய்யா க.சண்முகம் நூலை வெளியிட்டார். முதல் நூலை சக்தி நிறுவன தலைவர் சண்முகம் பெற்றுக்கொண்டார். மாநில ப.க அமைப்பாளர் வழக்குரைஞர் ப.இளங்கோ தொடக்கவுரை ஆற்றினார்.
பேராசிரியர் ப.காளிமுத்து அறிமுக உரை ஆற்றினார். மேலும் வை.பெரியசாமி, அசேன், குமாரசாமி, செல்வகுமார், ஜவகர் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக வழக்குரைஞர் இ.வா.கதிரவன் நன்றி கூறினார்.
