லண்டன் : கிரீன் விச் பார்க்கில் – ‘பெரியார் போட்லக்’

இணையவழி கையெழுத்து இயக்கம்

 

லண்டனில் பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்ட மாக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் லண்டன் தோழர்கள் கிரீன்விச் பார்க்கில், ‘பெரியார் போட்லக்’ (கூட் டுணவு) விருந்தை 19.9.2026  அன்று ஏற்பாடு செய்து குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.

கிரீன் விச் என்பது உலகத்தை இரண்டாக வகுக்கும் நில நீள்கோடு (Zero degree longitude) தொடங்கும் இடமாகும்.

‘பெரியார் போட்ல’க்கில்  தோழர் ராஜா பெரியார் அழகன் குடும்பம், தோழர் சேதுபதி ஆறுமுகம் குடும்பம், தோழர் ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து குடும்பம், தோழர் அஞ்சனா குடும்பம், மற்றும் தோழர் மகேஷ், தோழர் கிருபா முனுசாமி, தோழர் அனிச்சம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியார் பிஞ்சுகள் தோழர் ஜெனி, தோழர் அகரன், தோழர் சாரா, தோழர் ஹரிஹரன் மற்றும் தோழர் ஆதிரன் ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒவ்வொரு தோழர்களும் தங்கள் இல்லங்களில் இருந்து தயாரித்து வந்த அறுசுவை உணவை  பகிர்ந்து கொண்டும், பெரியார் சமூக நீதித் திருநாளை லண்டன் கிரீன் விச் பார்க்கில் மகிழ்ச்சியைப் பகிர்ந்தும் கொண்டாடினர்.

பெரியார் பிஞ்சுகள் தந்தை பெரியார் சிலையை கையில் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.  பின்னர் பெரியார் பிஞ்சுகள் அனைவரும் அருகில் இருந்த ஒரு சிறு  ஏரியில் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.

கலந்து கொண்ட பெரியார் பிஞ்சு களை சிறப்பிக்கும்  வகையில் மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஒவ்வொரு பெரியார் பிஞ்சுக்கும், தோழர் முனைவர் கிருபா முனுசாமி,  பெரியார் சுயமரியாதை இயக்கப் பிரச்சார நிறுவன வெளியிடான   ‘Periyar Self Respect’ புத்தகம், ‘Periyar’s The World to come’ புத்தகம், மற்றும் ‘Inscriptions at Periyar Memoriyal, Periyar Thidal’ புத்தகம் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கினார்.

புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட பெரியார் பிஞ்சுகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிரீன்விச் பார்க் நில நீள்கோடு உலகத்தை கிழக்கு – மேற்கு என்று இரண் டாக பகுத்துக் காட்டுகிறது. பெரியார் எனும் உயரிய சிந்தனையாளரின் கருத்துகளோ உலகத்தில் அனைவரும் சமம், அனைவருக்கும் அனைத்தும் எனும் இலக்கை நோக்கி ‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’ ஆக இணைத்துக் காட்டுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *