விழுப்புரம், செப். 24- விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அரங்க பரணிதரனின் சகோதரரும் மேனாள் தென்னாற்காடு மாவட்டத்தின் துணைத் தலைவர் அரங்கநாதன் அவர்களின் மகனுமாகிய ஸ்டாலினுடைய மறை விற்கு 19.09.2026 அன்று பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன், கடலூர் மாவட்டத் தலைவர் தாமோதரன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் கோபன்னா, நகரத் தலைவர் இராசேந் திரன், நகரச் செயலாளர் சதிஷ், கடலூர் மாவட்ட இளைஞரணிச் செயலா ளர் இராமநாதன், உளுந் தூர்பேட்டை ஒன்றியத் தலைவர் கனகராஜ், திண்டி வனம் கழக மாவட்டத் தலைவர் இர.அன்பழகன், திண்டிவனம் கழக மாவட்டச் செயலாளர் தா.இளம்பரிதி, திண்டி வனம் மாவட்டக் காப்பா ளர் செ.பரந்தாமன், தா. தம்பி பிரபாகரன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர், விழுப்புரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் மணிராஜ், பண்ருட்டி புத்தன் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு மலர்வலையம் வைத்து இறுதி மரியாதை செய்தனர்.
