தமிழ்நாட்டில் புதிய நீதிமன்றங்கள் அமைப்பு அறிக்கைத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 24– தமிழ் நாட்டில் புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பான திட்டங்கள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மாவட்ட நீதித்துறையின் 425 தற்காலிக நீதிமன்றங்களை நிரந்தர நீதிமன்றங்களாக மாற்றுவது தொடர்பாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உதவி அரசு வழக்குரைஞர்கள் நியமித்து சிறார் நீதி வாரியங்கள் அமைப்பது தொடர்பாகவும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பான திட்டங்கள் குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், மனித வள மேலாண்மைத்துறைச் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *