சந்தி சிரிக்கிறது அயோத்தி ராமன் கோயில்! காணிக்கை திருட்டில் 7000 பக்க குற்றப் பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப். 24– அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் காவல் துறையினர் 7 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை நேற்று (23.9.2026) தாக்கல் செய்தனர்.

ராமன் கோயில் காணிக்கை திருட்டு வழக்கின் விசாரணை அதிகாரியான அயோத்தி நகரக் காவல் நிலைய ஆய்வாளர் அசுதோஷ் திவாரி, சுமார் 7,000 பக்கக் குற்றப்பத்திரிகையை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நான்கு பெட்டிகள் மற்றும் ஒரு அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்தனர்.

இதில் அறக்கட்டளை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள், சிசிடிவி இயக்குபவர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உட்பட 173 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம் பெற்றுள்ளன. திருட்டு நிகழ்வு 105 முறை நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 803 பொருட்கள் திருட்டு தொடர்பான சிசிடிவி பதிவுகள் துல்லியமாக இருப்பது கண்டறியப்பட்டது.

86 மதிப்புமிக்க பொருட்கள் பெறப்பட்டதற்கான விவரம் கிடைக்கப்பெறவில்லை. பணம் எண்ணும் அறையில் முறைகேடு நிகழ்ந்ததுடன் விதிமுறைகள் மீறப்பட்டது தெரியவந்துள்ளது. பணம் எண்ணும் அறைக்குள் நுழைந்த மற்றும் வெளியேறிய ஊழியர்கள் முறையாக சோதனையிடப்படவில்லை. பணம் எண்ணும் நேரத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் படவில்லை.

மாற்று உண்டியல்களின் சாவிகள், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி முறைசாரா முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. சிசிடிவி காட்சிப் பதிவுகள், நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விடக் குறைவான காலத்துக்கே உள்நோக்கத்துடன் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் 2026இல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட 8 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கார், நகைகள் மற்றும் ரூ.79.85 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *