தமிழ்நாட்டில் தீவிரமடையும் டெங்கு, உண்ணிக் காய்ச்சல்! பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 22- தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து டெங்கு மற்றும் ‘ஸ்கரப் டைபஸ்’ எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன.

மாநிலம் முழுவதும் இதுவரை 17,277 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோருக்குப் புதிதாகப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது:

செப்டம்பர் 16: 283 பேர் செப்டம்பர் 17: 244 பேர் செப்டம்பர் 18: 253 பேர் செப்டம்பர் 19: 224 பேர் நேற்று முன்தினம்: 228 பேர்

சென்னையில் மட்டும் நேற்று (21.9.2026) ஒரே நாளில் 79 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் மிக தீவிரமாக உள்ளது.

உண்ணிக் காய்ச்சல் பரவல்

டெங்கு ஒருபுறம் அச்சுறுத்தி வரும் நிலையில், ‘ஸ்கரப் டைபஸ்’ எனும் உண்ணிக் காய்ச்சலால் இதுவரை 4,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிரத் தடுப்பு மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *