அயோத்தி ராமன் சக்தி அம்பலம்! கோயிலில் காணிக்கை திருட்டு –105 நிகழ்வுகள் சி.சி.டிவியில் பதிவு : உச்சநீதிமன்றத்தில் தகவல்

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப்.22 அயோத்தியில் உள்ள ராமன் கோயிலில் காணிக்கை திருடப்பட்ட 105 நிகழ்வுகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அயோத்தி ராமன் கோயிலில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காணிக்கைத் திருட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ராமன் கோயில் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். முன்னாள் ராணுவ அதிகாரியான ஜிதேந்திர மிஸ்ரா தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக, அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ் குஷ் மிஸ்ரா, மனிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமசங்கர் மிஸ்ரா, சுபாஷ் சிறீவஸ்தவா மற்றும் டின்னு ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் நடை பெற்று வரும் இவ்வழக்கு விசாரணையின் போது, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “காணிக்கை திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்அய்டி அறிக்கையை மேற்கோள் காட்டி, அயோத்தியில் உள்ள ராமன் கோயிலில் காணிக்கை திருடப்பட்ட 105 நிகழ்வுகள் கோயில் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. எஸ்அய்டியின் விசாரணை இறுதிச்சட்டத்தை எட்டியுள்ளது. வரும் 25-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றார்.

முன்னதாக, வழக்கை விசாரித்த போது, எஸ்அய்டி தாக்கல் செய்த நிலவர அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்தது. விசாரணையின்போது, இதுவரை எத்தனை பேர் கைது செய்யப் பட்டுள்ளனர், காணிக்கை திருட்டு தொடர்பாக என்னென்ன ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகள், சாட்சிகளின் வாக்கு மூலங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் தொடர்பான விவரங்களும் நீதிமன்றத்தில் பகிரப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடை யாளம் காண சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆவணங்கள் எவ்வாறு ஆய்வு செய்யப்பட்டன என்பது குறித்த விவரங்களும் நிலவர அறிக்கையில் இடம் பெற்றிருந்தன. அதை உச்சநீதி மன்றம் பதிவு செய்து கொண்டது.

செப்டம்பர் 25-ஆம் தேதி
குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆர்.ஷிமுன்னா அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் மேலும் இருவர் கைதாக உள்ளனர். இந்த வழக்கில் செப்டம்பர் 25-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *