இராஜபாளையம், முரம்பில் நடைபெற்ற பெரியார் 148 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் குருதிக்கொடை கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய குருதிக்கொடை முகாமில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குருதிக்கொடை வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கு பெரியார் குருதிக்கொடை கழகத் தலைவர் ஞானராஜா தலைமை ஏற்க குருதிக்கொடை கழகச் செயலாளர், பொருளாளர் வழவை முத்தரசன் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் கலந்துகொண்டு அனைவருக்கும் கேடயம் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில தகவல் தொடர்பு துறைத் துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்பான உரையை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல திருப்பதி, ராஜபாளையம் நகர தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் இரா பாண்டி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரியார் 148 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் குருதிக்கொடை முகாம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
