மலேசியா, ஈப்போ மாநகரில் பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு, ஈப்போ பெரியார் தொண்டர் குழு, பெரியார் பாசறை, மலேசிய திராவிடர் கழகம், மற்றும் சமூக அமைப்புகள் சார்ந்த பெரியார் தொண்டர்கள் திரளாக கலந்து சிறப்பித்தார்கள். மா.இலட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் த.சி. முருகன், த.சி.முனியராசன், மரு.கிருஷ்ணன், ஏலன் சமுதாயத் தொண்டர் வாசு, கவிஞர் முத்துப்பாண்டி, முனைவர் மு கோவிந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மதிய விருந்துடன் மூத்த பெரியார் தொண்டர்களுக்கு சிறப்புகள் செய்யப்பட்டன. பெரியார் பிறந்த நாள் செய்தி மடல் வெளியிடப்பட்டது. பெரியாரின் மலாயா வருகையை குறிக்கும் நூறாம் ஆண்டு விழா 2029 இல் ஈப்போவில் நடைபெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மலேசியா – ஈப்போ நகரில் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
