தந்தை பெரியார் 148 ஆவது பிறந்த நாள் விழா! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

இணையவழி கையெழுத்து இயக்கம்

விருதுநகர், செப். 21- விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், 12.09.2026 சனி காலை 9 மணியளவில், விருதுநகர் சிபிஅய் கட்சி அலுவலக வளாகத்தில், பள்ளி – கல்லூரி மாணவர் களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவரும், மாவட்ட ப.க. தலைவரு மான பா.அசோக் தலை மையில், மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, துணைத் தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், மாவட்ட ப.க. செயலாளர் கோ.பெத்தையா, அமைப் பாளர் வழவை முத்தரசன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட மகளிரணிச் செயலாளர் பொன்மேனி ராஜயோகம், பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, தோழர் மு.இராமச்சந்திரன் ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து போட்டியினை வழி நடத்தினர்.

போட்டி முடிவில், விருதுநகர் பி.எஸ்.சி.ஆங்கிலப் பள்ளி மாண விகள் வி.சாய் வர்த்தனா, கா.பத்ம சந்தோசினி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். ச.வெ.அண்ணாமலையம்மாள் நடுநிலைப் பள்ளி மாணவி சே.சிறீநிஷா இரண்டாம் பரிசும், ஹாஜி சிக்கந்தர் ஹவ்வாபீவி நடுநிலைப் பள்ளி மாணவி எஸ்.ஆபிதா ஃபஹ்மிதா மூன்றாம் பரிசும் பெற்றனர். கல்லூரி நிலையில் விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரி மாணவி மா.கார்த்திகா தேவி முதல் பரிசும், வி.எச்.என்.எஸ்.என். கல்லூரி மாணவர் மு.இராமச்சந் திரன் இரண்டாம் பரிசும், வி.வி.வி. பெண்கள் கல் லூரி மாணவி கு.நித்திலா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசுத் தொகையினை அருப்புக்கோட்டை மா.உதயகுமார், க.எழிலன், ஆயை.மு.காசா மைதீன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். அனைவருக் கும் சான்றிதழ் மற்றும் உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்கள் வழங்கப்பட்டது. காரியாபட்டி கிராம நிர்வாக அலுவலர் மு.வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்திப் பேசினர்.  பொதுக்குழு உறுப்பினர் இரா.அழகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.திருவள்ளுவர், அ.செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *